டீ கடை பெஞ்ச்: குப்பை நிர்வகிப்பில் 'கொழிக்கும்' அதிகாரிகள்!

தினமலர்  தினமலர்
டீ கடை பெஞ்ச்: குப்பை நிர்வகிப்பில் கொழிக்கும் அதிகாரிகள்!

''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தா, இப்படி நடக்குமான்னு புலம்பறா ஓய்...'' என்றபடியே, மெதுவடையை கடித்தார்

குப்பண்ணா.

''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி நிறுவனரான, மறைந்த நாராயணசாமி நாயுடுவின், 99வது பிறந்த நாள் விழா, சமீபத்துல, கோவை மாவட்டம், வையம்பாளையத்தில் நடந்துது ஓய்...

''ஜெயலலிதா இருந்த வரை, இந்த விழாவுக்கு அமைச்சர்கள் அல்லது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அனுப்பி வைப்பாங்க... இந்த வருஷம் பிறந்த நாள் விழாவுல, மற்ற கட்சியினர் கலந்துண்டா ஓய்...

''ஆனா, அ.தி.மு.க., தரப்புல இருந்து யாரும் கலந்துக்கல... 'அந்தம்மா இருந்திருந்தா, இப்படி எல்லாம் நடக்குமா'ன்னு தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேட்டவலம் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் விரக்தியில இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''சேர்மனை சுதந்திரமா செயல்பட விட மாட்டேங்காவ வே...'' என, அடுத்த தகவலுக்கு அடி போட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த ஊர் விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றிய சேர்மனா, பட்டியல் இனத்தை சேர்ந்த தேவேந்திரன் இருக்காரு... வடக்கு ஒன்றிய செயலரா பாபுவும், தெற்கு ஒன்றிய செயலரா சேகரும் இருக்காவ வே... ''இதுல, சேகர் துணை சேர்மனாகவும் இருக்காரு... பாபுவின் மனைவி, ஒன்றிய கவுன்சிலரா இருக்காங்க வே...

''எல்லாருமே ஆளுங்கட்சியான தி.மு.க., தான்... ஆனா, பாபுவும், சேகரும் ஓரணியில இருந்து, ஒன்றியத்துல எந்த தீர்மானம் போடுறது, நிதி ஒதுக்கீடு, யாருக்கு, 'டெண்டர்' விடுறது அப்படிங்கிறதை எல்லாம் முடிவு பண்ணுதாவ வே...

''சேர்மன் தேவேந்திரனுக்கு எந்த அதிகாரத்தையும் தர மாட்டேங்காவ... அவரை, 'டம்மி'யாவே வச்சிருக்காங்க... 'இதுல, சமுதாய வேறுபாடும் இருக்கு'ன்னு ஒன்றிய கவுன்சிலர்களே அலுத்துக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''என்கிட்டயும் ஒரு உள்ளாட்சி தகவல் இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''சீக்கிரம் சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''கோவை மாநகராட்சி யில, திடக்கழிவு மேலாண்மை பணிகளை, 'அவுட் சோர்சிங்' முறையில் தனியார் தான் செய்றாங்க... ஆனா, 'வார்டுகள்ல குப்பை மேலாண்மை படுமோசமா இருக்கு'ன்னு ஆளுங்கட்சி கவுன்சிலர்களே குறை சொல்றாங்க... ''தனியாருக்கு கொடுத்திருக்கிற டெண்டரை ரத்து செய்யணும்னு போர்க்கொடி துாக்கிட்டு இருக்காங்க... இதுக்கு மத்தியில, 'தனியார் நிறுவனத்தினர், அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள்ல, 'பல்க் வேஸ்ட்'களை வாங்கக் கூடாது'ன்னு விதியே இருக்குதுங்க...

''ஆனாலும், மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் பலர், மேற்கண்ட இடங்கள்ல மாதாந்திர மாமூல் வாங்கிட்டு, துாய்மை பணியாளர்களை அங்க அனுப்பி, 'பல்க் வேஸ்ட்'களை எடுத்துட்டு வரும்படி சொல்றாங்க... ''இதனால, வெள்ளலுார் குப்பை கிடங்குல தினமும் மலை போல குப்பை குவிஞ்சிட்டு இருக்குதுங்க... அதே நேரம், தெருக்கள்ல குப்பை அகற்றும் பணி சரியா நடக்க மாட்டேங்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

அரட்டை கச்சேரி முடிவுக்கு வர, பெரியவர்கள் இடத்தை காலி செய்தனர்.

''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தா, இப்படி நடக்குமான்னு புலம்பறா ஓய்...'' என்றபடியே, மெதுவடையை கடித்தார்குப்பண்ணா.''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தமிழக

மூலக்கதை