சுருளி அருவியில் 72 அடி உயர சிவலிங்கத்திற்கு கும்பாபிஷேகம்

தினமலர்  தினமலர்
சுருளி அருவியில் 72 அடி உயர சிவலிங்கத்திற்கு கும்பாபிஷேகம்

கம்பம்: சுருளி அருவியில் உள்ள கோடி லிங்கம் கோயிலில் பல ஆண்டுகளாக நிர்மாணிக்கப்பட்டு வந்த 72 அடி உயர சிவலிங்கத்திற்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சுருளி அருவியில் மிக புராதனமான பூத நாராயனார் கோயில், சுருளி வேலப்பர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில்கள் உள்ளன. இங்கு கோடி லிங்கேஸ்வரர் கோயில் பல ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டது.

கோடி லிங்கங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 20 ஆயிரம் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இதே வளாகத்தில் 72 அடி உயரம், 58 அடி அகலம் கொண்ட சிவ லிங்கம் பிரமாண்டமாக பல ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடைபெற்றது.

அந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று பிரதிஷ்டை விழா மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. யாக பூஜைகள், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 72 அடி உயர லிங்கேஸ்வரர் சிலை பிரதிஷ்டையின் போது அஸ்ட லிங்க பூஜைகள் நடந்தது. காலை கடம் புறப்பட்டு புனித நீர் 72 அடி உயர லிங்கத்தில் ஊற்றப்பட்டது. திரண்டிருந்த பத்தர்கள் 'ஹர ஹர மகாதேவா' என முழக்கமிட்டனர்.

அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.

கம்பம்: சுருளி அருவியில் உள்ள கோடி லிங்கம் கோயிலில் பல ஆண்டுகளாக நிர்மாணிக்கப்பட்டு வந்த 72 அடி உயர சிவலிங்கத்திற்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.சுருளி அருவியில் மிக புராதனமான

மூலக்கதை