'பா.ஜ., எதிர்ப்பு ஓட்டுகளை அ.தி.மு.க., பிரிக்கிறது!'

தினமலர்  தினமலர்
பா.ஜ., எதிர்ப்பு ஓட்டுகளை அ.தி.மு.க., பிரிக்கிறது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


சென்னை: 'லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வை படுதோல்வி அடைய செய்ய வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம், சென்னையில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் நடந்தது.

அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ராமகிருஷ்ணன், மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


 லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணியை வீழ்த்த, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை மகத்தான வெற்றியை பெற வைக்க வேண்டும்

 தமிழகத்திற்கு மத்திய அரசு வஞ்சகம் இழைப்பதை, அ.தி.மு.க., எதிர்க்கவில்லை

 பா.ஜ.,வை வீழ்த்தும் போராட்டத்தை பலவீனப்படுத்தவும், பா.ஜ., எதிர்ப்பு ஓட்டுகளை பிரித்து மறைமுக சேவையாற்றும் அ.தி.மு.க., போன்ற கட்சிகளை படுதோல்வி அடைய செய்ய வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை: 'லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வை படுதோல்வி அடைய செய்ய வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம்,

மூலக்கதை