கீழமை நீதிமன்றங்கள் இனி விசாரணை நீதிமன்றங்கள்

தினமலர்  தினமலர்
கீழமை நீதிமன்றங்கள் இனி விசாரணை நீதிமன்றங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


புதுடில்லி : 'கீழமை நீதிமன்றங்களை இனி விசாரணை நீதிமன்றம் என குறிப்பிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு, 1981ல் நடந்த கொலை தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை, அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அலகாபாத் கீழமை நீதிமன்றம் எனப்படும் விசாரணை நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்தது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கீழமை நீதிமன்றங்கள் என இனி குறிப்பிடக் கூடாது என தெரிவித்தனர். இது தொடர்பான உத்தரவில் அவர்கள் கூறியதாவது:

'ட்ரையல் கோர்ட்ஸ்' எனப்படும் விசாரணை நீதிமன்றங்களை, 'கீழ் நீதிமன்றங்கள்' என்று குறிப்பிடுவதை நிறுத்தினால் அது பொருத்தமானதாக இருக்கும். விசாரணை நீதிமன்றத்தின் பதிவேட்டைக்கூட கீழ் நீதிமன்றப் பதிவு என குறிப்பிடக் கூடாது.

மாறாக, அதை விசாரணை நீதிமன்ற பதிவேடு என குறிப்பிட வேண்டும். இந்த உத்தரவை, உச்ச நீதிமன்ற பதிவாளர் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த உத்தரவின் நகல் அவருக்கு அனுப்பப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதுடில்லி : 'கீழமை நீதிமன்றங்களை இனி விசாரணை நீதிமன்றம் என குறிப்பிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு, 1981ல் நடந்த கொலை

மூலக்கதை