40 தொகுதிகளிலும் 3 நாட்களுக்கு தி.மு.க., பிரசார பொதுக்கூட்டம்

  தினமலர்
40 தொகுதிகளிலும் 3 நாட்களுக்கு தி.மு.க., பிரசார பொதுக்கூட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்



சென்னை: 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில், வரும் 16, 17, 18 ஆகிய நாட்களில், லோக்சபா தொகுதிவாரியாக பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என, தி.மு.க., அறிவித்துள்ளது.

இது குறித்து, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:


வரும் லோக்சபாதேர்தலில், மத்திய அரசு தமிழகத்திற்கு இழைத்த அநீதிகளையும், அ.தி.மு.க., வின் துரோகங்களையும் மக்களிடம்கொண்டு சேர்க்கவேண்டும்.

முதற்கட்டமாக, 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில், லோக்சபா தொகுதிவாரியான பிரசார பொதுக்கூட்டங்களில் கட்சி முன்னணியினர் பங்கேற்று பேசுவர்.

தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க, முதல்வர் ஸ்டாலினின் குரலாக நடக்கவுள்ள பிரசார பொதுக்கூட்டங்களை பிரமாண்ட கூட்டங்களாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

இதன்படி,பொதுக்கூட்டங்களில் பேசுவோர் குறித்த விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை: 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில், வரும் 16, 17, 18 ஆகிய நாட்களில், லோக்சபா தொகுதிவாரியாக பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என, தி.மு.க., அறிவித்துள்ளது.இது

மூலக்கதை