பாரம்பரிய சின்னங்களின் நில உரிமை தொல்லியல் துறைக்கு மாற்றப்படுமா?

தினமலர்  தினமலர்
பாரம்பரிய சின்னங்களின் நில உரிமை தொல்லியல் துறைக்கு மாற்றப்படுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்



சென்னை: 'பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்கள் அமைந்துள்ள நிலங்களின் உரிமையை, இந்திய தொல்லியல் துறையின் பெயருக்கு மாற்றித்தர வேண்டும்' என, அந்த துறையின் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

தமிழகத்தில், 242 இடங்களில் வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. இந்த சின்னங்கள் மற்றும் அவை சார்ந்த கட்டடங்கள், இந்திய தொல்லிய துறையான, ஏ.எஸ்.ஐ.,யின் கட்டுப்பாட்டில் உள்ளன.

நடவடிக்கை



ஆனால், சின்னங்கள் அமைந்துள்ள நிலங்கள் தனியார் பெயரிலும், தமிழக அரசின் பெயரிலும் உள்ளன.

உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தலையீட்டால், பல இடங்களில் பாரம்பரிய சின்னங்களை சுற்றியுள்ள நிலங்கள் மோசடியாக அபகரிக்கப்படுகின்றன. இது தொடர்ந்தால், எதிர்காலத்தில் பாரம்பரிய சின்னங்களே அழிக்கப்படும் நிலை உருவாகும்.

எனவே, இந்த சின்னங்களை பாதுகாப்பதற்கும், எதிர்கால ஆய்வுக்கு பயன்படுத்தவும், இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக, இந்த சின்னங்கள் அமைந்துள்ள நிலங்களை, தங்கள் பெயருக்கு மாற்ற முடிவு செய்து உள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் பல்வேறு துறை உயர் அதிகாரிகள், ஏ.எஸ்.ஐ., அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், பாரம்பரிய சின்னங்கள் அமைந்துள்ள நிலங்களின் உரிமையை, ஏ.எஸ்.ஐ., பெயருக்கு மாற்ற சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

கடிதம்



இதன் அடிப்படையில், அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, தொல்லியல் துறையின் சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து கடிதம் எழுதி வருகிறார்.

இதன்படி, செங்கல்பட்டு கலெக்டருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:

பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதற்காக, நில உரிமையை மாற்ற வேண்டும். முதற்கட்டமாக, சென்னை வட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 80 பாரம்பரிய சின்னங்கள் குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அவற்றின் நில உரிமை தனியார் பெயரிலும், தமிழக அரசின் பெயரிலும் உள்ளன. இந்த நிலங்களின் உரிமையை தொல்லியல் துறைக்கு மாற்றித் தர வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

சென்னை: 'பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்கள் அமைந்துள்ள நிலங்களின் உரிமையை, இந்திய தொல்லியல் துறையின் பெயருக்கு மாற்றித்தர வேண்டும்' என, அந்த துறையின் அதிகாரிகள், மாவட்ட

மூலக்கதை