பிரதமர் வருகைக்கு பின் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
பிரதமர் வருகைக்கு பின் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்புசென்னை: பிரதமர் மோடி வருகைக்கு பின், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கூடுதல் வருவாய் கிடைப்பதால், அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், சுற்றுலா பயணியருக்கான அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா, ஜன., 22ல் நடந்தது. இதற்காக, 11 நாட்கள் விரதம் இருந்த பிரதமர் மோடி, நாடு முழுதும் முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபட்டார்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து அரிச்சல்முனைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். மொழி பிரச்னையால், அங்குள்ள வியாபாரிகளிடம், தமிழகத்தின் சிறப்புகளையும், ராமருடனான பிணைப்பு குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.எனவே, 'கைடு' எனப்படும் சுற்றுலா வழிகாட்டிகளை நியமித்து, தமிழகத்தின் சிறப்புகளை, மற்ற மாநிலத்தவர்களின் தாய்மொழியில் தெரிவிக்க வழிவகை செய்ய வேண்டும். கழிப்பறை, குடிநீர் வசதியை, தமிழக அரசு ஏற்படுத்தி கொடுப்பதும் அவசியம். இவ்வாறு செய்தால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.சென்னை: பிரதமர் மோடி வருகைக்கு பின், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கூடுதல் வருவாய் கிடைப்பதால், அங்குள்ள

மூலக்கதை