பாலியல் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கியதால் எதிர்ப்பு: ஹங்கேரி அதிபர் ராஜினாமா

தினமலர்  தினமலர்
பாலியல் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கியதால் எதிர்ப்பு: ஹங்கேரி அதிபர் ராஜினாமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புடாபெஸ்ட்: குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு பொது மன்னிப்பு வழங்கியதால் நாட்டு மக்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியதால், ஹங்கேரி அதிபர் கடலின் நோவாக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஹங்கேரி அதிபராக கடந்த 2022ம் ஆண்டு முதல் கடலின் நோவாக் பதவி வகித்து வருகிறார். காப்பகத்தில் வசித்த குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபருக்கு, கடலின் நோவாக் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கினார். இது அந்நாட்டு மக்கள் இடையே கடும் அதிருப்தி கிளம்பியது. பலரும் அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்க துவங்கினர்.

இதனையடுத்து டிவி மூலம் ஹங்கேரி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக கடலின் நோவாக் அறிவித்துள்ளார். அப்போது அவர், மன்னிப்பு வழங்கிய விவகாரத்தில் தவறு இழைத்து விட்டதாக கூறியுள்ளார்.

புடாபெஸ்ட்: குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு பொது மன்னிப்பு வழங்கியதால் நாட்டு மக்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியதால், ஹங்கேரி அதிபர் கடலின் நோவாக் தனது பதவியை ராஜினாமா

மூலக்கதை