ஏ.டி.எம்.,மில் கிடந்த ரூ.10 ஆயிரம் போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

தினமலர்  தினமலர்
ஏ.டி.எம்.,மில் கிடந்த ரூ.10 ஆயிரம் போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்சங்கராபுரம்: சங்கராபுரத்தில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 ஆயிரம் ரூபாயை எடுத்த ஆட்டோ டிரைவர், போலீசில் ஒப்படைத்தார்.

சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மலையான் மகன் ஆனந்தன், 40; ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இவரது ஆட்டோவில் வந்த முதியவர் தனது ஏ.டி.எம்., கார்டைக் கொடுத்து பணம் எடுத்துத் தரும்படி கேட்டுள்ளார்.

ஆனந்தன் அப்பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்., மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றார். அப்போது, ஏ.டி.எம்., இயந்திரத்தின் பணம் வரும் பகுதியில் 10 ஆயிரம் ரூபாய் இருந்ததைப் பார்த்து, அதனை எடுத்து யாராவது பணத்தை எடுக்காமல் விட்டுச் சென்றிருக்கலாம் என விசாரித்தார். ஆனால், யாரும் உரிமை கோரவில்லை.

அதனைத் தொடர்ந்து அந்த பணத்தை அப்படியே சங்கராபுரம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரனிடம் ஒப்படைத்தார்.

ஏ.டி.எம்., இயந்திரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 ஆயிரம் ரூபாயை நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 ஆயிரம் ரூபாயை எடுத்த ஆட்டோ டிரைவர், போலீசில் ஒப்படைத்தார்.சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்

மூலக்கதை