ஏழ்மையிலும் சாதிக்கும் கிராமத்து மாணவி ஓவியம் வரைதலில் எண்ணற்ற சாதனைகள்

தினமலர்  தினமலர்
ஏழ்மையிலும் சாதிக்கும் கிராமத்து மாணவி ஓவியம் வரைதலில் எண்ணற்ற சாதனைகள்

சிவகாசி: ஓவியக்கலை என்பது வரைபடம், வெளிப்பாட்டு கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலை. இது எல்லோருக்கும் எளிதில் வராது.

அந்த வகையில் சிவகாசி அருகே கடைக்கோடியில் உள்ள வி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி 22, இடைவிடாது தொடர்ச்சியாக ஓவியம் வரைதலில் எண்ணற்ற சாதனைகள் படைத்து சான்றிதழ்கள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.

ஓவியம் மட்டுமல்லாது தடகள போட்டிகளில் சாதித்து வரும் இவர் கூறியதாவது, எனது பெற்றோர் அய்யனார், நிறைகுளத்தாள் ஊரில் சிறிய அளவில் இட்லி கடை நடத்தி வருகின்றனர்.

நான் தற்போது சென்னையில் உள்ள கல்லுாரியில் ஆர்கிடெக்ட் படித்து வருகின்றேன். நான் சாத்துாரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் போது எட்டு வயதில் இருந்து ஓவியம் நானாக வரைய பழகினேன். தொடர்ந்து ஓவியம் வரைய நேரம் அமையவில்லை.

ஆனாலும் ஓவியம் மீது இருந்த காதலால் இதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என முயற்சி செய்து வந்தேன். இதற்காக யாருடைய உதவியும் இன்றி சுயமாக எனது முயற்சியை துவக்கினேன்.

இந்நிலையில் 2021ல் இந்திய அளவில் முதல் முறையாக 12 மணி நேரம் இடைவிடாது ஓவியம் வரைந்து முதல் பெண்ணாக சாதனை படைத்தேன். எனது சாதனையை நானே முறியடிக்கும் விதமாக 2022ல் தொடர்ச்சியாக 15 மணி நேரம் மண்டலா ஓவியம் வரைந்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட், கலாம் வேர்ல்ட் ரெக்கார்டில் சாதனை படைத்து இன்டர்நேஷனல் அளவில் அவார்டு வாங்கினேன். மீண்டும் புதிய முயற்சியாக 2023ல் தொடர்ச்சியாக 18 மணி நேரம் ஓவியம் வரைந்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட், கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் என மூன்று சாதனைகளை படைத்தேன்.

இதற்காக டெல்லியில் ஓவியத்திற்காக விருது வாங்கி உள்ளேன். அடுத்ததாக புதிய சாதனையாக இடைவிடாது 24 மணி நேரம் ஓவிய வரைவதற்கு பயிற்சி எடுத்து வருகின்றேன்.

விரைவில் இந்த சாதனையை படைப்பேன். ஏழ்மை நிலையாக இருந்தாலும் யாருடைய உதவியும் இல்லாமல் நானாகவே முயற்சி செய்து இச்சாதனைகளை படைத்து வருகின்றேன். இவரை பாராட்ட 90257 62958.

சிவகாசி: ஓவியக்கலை என்பது வரைபடம், வெளிப்பாட்டு கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலை. இது எல்லோருக்கும் எளிதில் வராது. அந்த வகையில் சிவகாசி அருகே கடைக்கோடியில் உள்ள

மூலக்கதை