விசா இல்லாமல் ஈரான் செல்ல இந்தியர்களுக்கு 4 கண்டிஷன்

தினமலர்  தினமலர்

'இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணியருக்கு விசா தேவையில்லை' என அறிவித்துள்ள ஈரான் அரசு, நான்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரானில் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணியரின் வருகையை அதிகரிக்கவும் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, சவுதி அரேபியா, கத்தார், குவைத், மலேஷியா, பிரேசில், மெக்சிகோ, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர், ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யும் நடைமுறை, நான்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக, ஈரான் துாதரகம் தெரிவித்துள்ளது.

சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் விசா இல்லாமல் ஈரானுக்கு வரலாம். அப்படி வரும் போது அதிகபட்சமாக 15 நாட்கள் தங்கலாம். இது நீட்டிக்கப்படாது. இந்த நடைமுறை சுற்றுலா நோக்கங்களுக்காக வருவோருக்கு மட்டுமே பொருந்தும். ஈரானில் அதிக நாட்கள் தங்க விரும்புவோர் மற்றும் ஆறு மாதங்களில் பல முறை வர நினைப்போர், அதற்குரிய விசாவை பெற வேண்டும்

இந்த நடைமுறை, விமானம் வாயிலாக ஈரான் வரும் இந்தியர்களுக்கே பொருந்தும், இந்தியர்கள் விசா இல்லாமல் வரலாம் என, இலங்கை, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அறிவித்த நிலையில், இந்த வரிசையில் தற்போது ஈரானும் சேர்ந்துள்ளது.

'இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணியருக்கு விசா தேவையில்லை' என அறிவித்துள்ள ஈரான் அரசு, நான்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.மேற்காசிய நாடான ஈரானில் சுற்றுலா துறையை

மூலக்கதை