ஐஸ்கிரீம், சிக்கனில் செயற்கை வண்ணங்களா; குழந்தைகளும், இளைஞர்களும் 'டார்கெட்'

தினமலர்  தினமலர்
ஐஸ்கிரீம், சிக்கனில் செயற்கை வண்ணங்களா; குழந்தைகளும், இளைஞர்களும் டார்கெட்

மதுரை, : ரோட்டோர சில கடைகள் முதல் ஓட்டல்கள் வரை ஐஸ்கிரீம், சர்பத், குளிர்பானம், ரோஸ் மில்க், சிக்கன் உள்ளிட்ட அனைத்து உணவுகளிலும் செயற்கை வண்ணங்கள் கலப்பதால் அவற்றை உண்ணும் போது உடல்நலம் பாதிப்பதோடு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குழந்தைகளை கவரும் வகையில் ரோஸ்மில்க், பஞ்சுமிட்டாய், வண்ண மிட்டாய்கள், ஐஸ்கிரீமில் பச்சை, ஊதா நிறங்கள், சர்பத்தில் வண்ண நிறங்கள் அனுமதி இல்லாத செயற்கை நிறங்களாக சேர்க்கப்படுகின்றன. அதன் மூலம் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. கேன்கள், குடங்களில் மினரல் வாட்டர் என்ற பெயரில் விற்கப்படும் பாதுகாப்பற்ற குடிநீரிலும் இ-கோலே கிருமிகள் கலந்து வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை டைபாய்டு நோய்களை உருவாக்க வாய்ப்புள்ளது. சில தள்ளு வண்டிகளில் விற்கப்படும் வண்ண ஐஸ்கிரீம்களும் தரமற்றதாக இருந்தால் சாப்பிடக்கூடாது. குழந்தைகளையும் இளைஞர்களையும் கவரும் வண்ணங்களில் நிறங்கள் சேர்ப்பதால் எச்சரிக்கை தேவை என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் எச்சரிக்கிறார்.

அவர் கூறியதாவது: கடந்தாண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு ஜனவரி வரை 929 உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் ரோட்டோர கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், பலசரக்கு பொருட்கள், கேக் பிஸ்கட், சாக்லேட் தண்ணீர் உட்பட அனைத்து மாதிரிகளும் அடங்கும். இதில் 94 உணவு மாதிரிகள் பாதுகாப்பு அற்றவையாக 38 உணவு மாதிரிகள் தரம் குறைந்தும் 11 உணவு மாதிரிகள் லேபிள் குறைபாடு வகையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற 94 உணவு மாதிரிகள் தயாரித்த நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்கு ஆறு மாதம் சிறை தண்டனை, ரூ. 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மற்ற இரண்டு வகைகளுக்கு ரூ. 2 முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ரோட்டோர உணவு கடைகள் முதல் ஓட்டல்கள் வரை அனைவருமே உணவு பாதுகாப்பு துறையின் பதிவு சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். கண்ணைப் பறிக்கும் நிறங்களில் உணவு, குளிர்பானம், கேக், ஸ்வீட் தயாரிக்கப்பட்டிருந்தால் புகார் (94440 42322) செய்யலாம் என்றார்.

மதுரை, : ரோட்டோர சில கடைகள் முதல் ஓட்டல்கள் வரை ஐஸ்கிரீம், சர்பத், குளிர்பானம், ரோஸ் மில்க், சிக்கன் உள்ளிட்ட அனைத்து உணவுகளிலும் செயற்கை வண்ணங்கள் கலப்பதால் அவற்றை உண்ணும் போது

மூலக்கதை