பாக்., தேர்தல்: பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என நவாஸ் ஷெரீப் நம்பிக்கை

  தினமலர்
பாக்., தேர்தல்: பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என நவாஸ் ஷெரீப் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பார்லிமென்ட் தேர்தல் நேற்று நடந்தது. இதில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி பெரும்பான்மை பெறும் எனவும், தொங்கு பாராளுமன்றம் அமையும் என மற்றொரு புறமும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பக்கத்து நாடான பாகிஸ்தானில் நேற்று பொது தேர்தல் நடந்தது. மொத்தம் 336 உறுப்பினர்களை உடைய பார்லிமென்டிற்கு, 266 பேர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.மீதியுள்ள இடங்களில், 60 பெண்களுக்கும், 10 அந்நாட்டு சிறுபான்மை இன மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. மற்றொரு முன்னாள் பிரதமர் இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியில், இம்ரான் கான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அந்த கட்சி சார்பில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களுக்கு, வேறு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பெரும்பான்மை பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தொங்கு பாராளுமன்றம் அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் நவாஸ் ஷெரீப் ஆட்சியை பிடிக்கும் நம்பிக்கையில் உள்ளார். தாம் ஆட்சி அமைத்ததுடன், பக்கத்து நாடான இந்தியா, உள்ளிட்ட உலக நாடுகளுடன் நட்புறவுடன் தீவிரப்படுத்துவோம் என்றார்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பார்லிமென்ட் தேர்தல் நேற்று நடந்தது. இதில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி பெரும்பான்மை பெறும் எனவும், தொங்கு

மூலக்கதை