பன்னாட்டு நிலையமாக மதுரை விமான நிலையம் வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு

தினமலர்  தினமலர்
பன்னாட்டு நிலையமாக மதுரை விமான நிலையம் வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு

மதுரை: மதுரை விமான நிலையம் பன்னாட்டு நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் கூறியதாவது:

சர்வதேச விமானப் பயணத்திற்கு தென் தமிழகத்தின் நுழைவாயிலாககருதப்படும் மதுரை விமான நிலையம் பிற நாடுகளுடன் நம் நாடு மேற்கொண்டுள்ள இருவழி ஒப்பந்தங்களில் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், குவைத், ஐக்கிய அரபு மற்றும் இதர வளைகுடா நாடுகளுடன் மதுரை விமான நிலையம் உடனடியாக சேர்க்கப்பட வேண்டும். மதுரைக்கு நேரடி விமான சேவையை துவங்க தயாராக இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மதுரை உள்ளிட்ட 5 விமான நிலையங்கள் 24 மணிநேர விமான நிலையமாக செயல்படும் என கடந்தாண்டு ஜனவரியில் பார்லிமென்டில் அறிவிக்கப்பட்டு அதற்கான ஆணை வெளியிடப்பட்டது. ஆனால் இன்று வரை மதுரை விமான நிலையம் காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 2 ஷிப்டுகளாக செயல்படுகிறது. 3-வது ஷிப்ட் செயல்பாட்டில் இல்லை.

பன்னாட்டு விமான நிலையமாக உயர்த்தப்படாமல், சுங்க விமான நிலையமாக மட்டுமே செயல்பட்டு வருகிறது.

எனவே 1962-ம் ஆண்டு முதல் வணிகப்பயன்பாட்டிற்கு வந்த மதுரை விமான நிலையம் 62 ஆண்டுகளை கடந்துஉள்ளது.

இதனை 24 மணி நேர விமான நிலையமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி மாற்றப்படும் பட்சத்தில் தென் தமிழகத்திலிருந்து அதிகளவில் ஏற்றுமதியாகும் மலர்கள், பழங்கள், காய்கறிகள் இன்னும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு அதிகரிக்கும் என்றார்.

மதுரை: மதுரை விமான நிலையம் பன்னாட்டு நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: சர்வதேச விமானப்

மூலக்கதை