கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நிறைவு - 97 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது தமிழ்நாடு அணி

  வலைத்தமிழ்

 

38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்தது.

 

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்றது . கடந்த 19 -ம் தேதி இந்த விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற இந்த கேலோ இந்தியா போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன.

 

இந்தப் போட்டியில் 55 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 156 பதக்கங்களுடன் மராட்டிய அணி முதலிடம் பிடித்தது.

 

38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்தது.

 

35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் அரியானா அணி 3வது இடம் பிடித்துள்ளது .

மூலக்கதை