ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கொடிமரம் மற்றும் சிலைகள் காணவில்லை' - நிர்வாக அதிகாரி புகார்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலானது, 108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் தலமாகும். இக்கோயிலில் வருடந்தோறும் திருவாடிப்பூர உற்சவம், மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

 

இவ்விழாக்களில் கலந்து கொள்ளத் தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் திருக்கோயில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, மதுரையில் அமைந்துள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் ஒன்று அளித்துள்ளார்.

 

அதில், "கடந்த 2015 மற்றும் 16-ம் ஆண்டுகளில் ஆண்டாள் கோயில் குடமுழுக்கு விழா மற்றும் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்துள்ள வடபத்ரசயனர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாக்கள் நடைபெற்றது.

 

வெளியே எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

 

 

குறிப்பாகத் திருக்கோயிலில் நடைபெறும் உற்சவங்களின்போதும், விழாக்கள் ஆரம்பமாகும்போதும் கொடியேற்றுவது வழக்கம். இதற்காகப் பழைய கொடிமரங்கள் அகற்றப்பட்டு, புதிய கொடி மரங்கள் நிறுவப்படும். அதன்படி, கோயிலில் மூன்று கொடி மரங்கள் அகற்றப்பட்டு, புதிய கொடிமரம் நிர்மாணிக்கப்பட்டது. அவ்வாறு அகற்றப்பட்ட பழைமையான மூன்று கொடி மரங்களில் செப்புத்தகடு உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் பதிக்கப்பட்டிருந்தது. மூன்று கொடி மரங்களில் தற்போது ஒன்றைத் தவிர மற்ற இரண்டு கொடி மரங்கள் கோயில் வளாகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இது சட்ட விரோதமான செயலாகும்.

 

முன்னதாக, கடந்த 2008, 2009-ம் ஆண்டுகளில் ஆண்டாள் கோயில் கொடிமரம் அருகே அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தின் வாசற்படியில் அமைக்கப்பட்டிருந்த பழைமையான கற்களால் ஆன யானை சிலைகள் இரண்டையும் காணவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது. திருக்கோயில் வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவம், ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை