'கூட்டு சேர்ந்து செயல்படும் 3 கட்சிகள்'

தினமலர்  தினமலர்
கூட்டு சேர்ந்து செயல்படும் 3 கட்சிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


ஹைதராபாத்: ''தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதி, பா.ஜ., - அசாதுதீன் ஓவைசியின், ஏ.ஐ.எம்.ஐ.எம்., ஆகியவை கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன,'' என, காங்., பொதுச்செயலர் பிரியங்கா குற்றம் சாட்டி உள்ளார்.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடக்கிறது. 119 சட்டசபை தொகுதிகளை உடைய இங்கு, வரும் 30ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி, ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதி, எதிர்க்கட்சிகளான காங்., - பா.ஜ., உள்ளிட்டவை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், தலைநகர் ஹைதராபாதில் உள்ள கானாபூரில் நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில், காங்., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா பேசியதாவது:

ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி, பல்வேறு மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களின் போது நிறைய இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறார்.

அப்படியிருக்கையில், 119 சட்டசபை தொகுதிகளுள்ள தெலுங்கானாவில், அவரது கட்சி, வெறும் ஒன்பது இடங்களில் மட்டும் போட்டியிடுவது ஏன்? காரணம், தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதியை அவர் ஆதரிக்கிறார்.

மத்தியில், பா.ஜ.,வை, பாரத் ராஷ்ட்ர சமிதி ஆதரிக்கிறது. இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையே ஒரு மறைமுக கூட்டணி ஒப்பந்தம் உள்ளது.

நீங்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தால், அது, பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு ஓட்டளிப்பதாக அர்த்தம். ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சிக்கு ஓட்டளித்தால், அது, பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு ஓட்டளிப்பதாக சமம். இந்த மூன்று கட்சிகளுமே ஒன்று தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஹைதராபாத்: ''தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதி, பா.ஜ., - அசாதுதீன் ஓவைசியின், ஏ.ஐ.எம்.ஐ.எம்., ஆகியவை கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன,'' என, காங்., பொதுச்செயலர் பிரியங்கா குற்றம்

மூலக்கதை