ஈ.வெ.ரா., சிலையை உடைக்கும் திட்டம் நிறைவேறாது: அழகிரி

தினமலர்  தினமலர்
ஈ.வெ.ரா., சிலையை உடைக்கும் திட்டம் நிறைவேறாது: அழகிரிசென்னை : ''ஈ.வெ.ரா., சிலையை உடைக்கும் திட்டம் ஒரு போதும் நிறைவேறாது; காங்கிரஸ் போராட்டம் நடத்தும்,'' என, தமிழக காங்., தலைவர் அழகிரி பேசினார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின், 106வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை சத்தியமூர்த்திபவனில், இலக்கிய அணி மாநில தலைவர் புத்தன் தலைமையில் கருத்தரங்கம் நடந்தது.

இதில், தமிழக தலைவர் அழகிரி பேசியதாவது:தமிழகத்தில் மது ஒழிப்பை காமராஜர் கொண்டு வந்தார். தனியார் வங்கிகளை தேசியமயமாக்கி, மிகப்பெரிய புரட்சி செய்தவர் இந்திரா.

'ஈ.வெ.ரா., சிலையை உடைப்போம்; அவரது சிலைக்கு கீழ் இருக்கும் வாசகத்தை அழிப்போம்' என்று சிலர் கூறுகின்றனர். அது, ஒரு போதும் நடக்காது. நாங்கள் எதிர்த்து போராடுவோம்.

ராகுலை பிரதமராக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து உருவாகி உள்ளது. பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப, ராகுல் ஒருவரால் தான் முடியும்.

அன்று சுதந்திரத்திற்கு முன், மகாத்மா காந்தி பின் மக்கள் சென்றனர்; இன்று ராகுலுக்கு பின் அணி வகுத்துள்ளனர். அதனால் தான், ராகுலின் இந்திய ஒற்றுமை பயணம் வெற்றி பெற்றது.

இவ்வாறு அழகிரி பேசினார்.

சென்னை : ''ஈ.வெ.ரா., சிலையை உடைக்கும் திட்டம் ஒரு போதும் நிறைவேறாது; காங்கிரஸ் போராட்டம் நடத்தும்,'' என, தமிழக காங்., தலைவர் அழகிரி பேசினார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின், 106வது

மூலக்கதை