ஓபன்ஏஐ மாஜி சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேனுக்கு உயர் பதவி அளித்த மைக்ரோசாப்ட்

தினமலர்  தினமலர்
ஓபன்ஏஐ மாஜி சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேனுக்கு உயர் பதவி அளித்த மைக்ரோசாப்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட அதன் சி.இ.ஓ.,சாம் ஆல்ட்மேனை, மைக்ரோசாப்ட் நிறுவனம் வரவேற்று உயர் பதவி அளித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் ஓபன்ஏஐ இதன் சி.ஓ.வாக சாம் ஆல்ட்மேன் பொறுப்பேற்று நிர்வாகித்து வந்தார்.

சமீபத்தில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையறிந்த மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சத்யநாதெல்லா, சாம் ஆல்ட்மேனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி ஆதரவு நீட்டியுள்ளார்.

இதன் பின்னணி குறித்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், உலக அளவில் தற்போது ஏ.ஐ., எனப்படும் செற்கை நுண்ணறிவு மனிதக் குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சாட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஓபன்ஏஐ நிறுவனத்தில் சாட்ஜிபிடி என்ற கருவி உலகின் வலிமையான ஒன்றாக புகழ் பெற்று வருகிறது. இக்கருவியை உருவாக்க காரணமாக இருந்தவர் சாம் ஆல்ட்மேன் என கூறப்படுகிறது. சாம் ஆல்ட்மேன் திறமையை தன் நிறுவனத்திற்கு பயன்படுத்திக்கொள்ளவே சத்ய நாதெல்லா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாஷிங்டன்: ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட அதன் சி.இ.ஓ.,சாம் ஆல்ட்மேனை, மைக்ரோசாப்ட் நிறுவனம் வரவேற்று உயர் பதவி அளித்துள்ளது.அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு

மூலக்கதை