விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது.?

  தினமலர்
விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது.?

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மார்பு சளி மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவ்வப்போது செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அச்செய்திகள் வதந்தி என தேமுதிக சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தேமுதிக சார்பில் அளிக்கப்பட்ட விளக்கம் : விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். யாரும் பரப்பவும் வேண்டாம். இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது.

மூலக்கதை