5 தமிழர்கள் உட்பட 84 பேருக்கு சங்கீத நாடக அகாடமி அமிர்த விருதுகள்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

75 வயதுக்கு மேற்பட்ட மற்றும் இதுவரை தேசிய அளவில் கவுரவிக்கப்படாத கலை பிரிவை சேர்ந்த 5 தமிழர்கள் உட்பட 84 கலைஞர்கள் இந்த ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி அமிர்த விரதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ''''''''''''''''''''''''''' புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் 2023 செப்டம்பர் 16&ம்தேதி சங்கீத நாடக    அகாடமி அமிர்த விரதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். '''''''''''''''''' விழாவில் தமிழகத்தை சேர்ந்த கர்நாடக சங்கீத கலைஞர் கவுரி குப்புசுவாமி(91), நாதஸ்வர இசை கலைஞர் சுப்புராயன் சின்னதம்பி(92), நாடக கலைஞர் ராமமூர்த்தி சுந்தரேசன்(84), பரதநட்டிய கலைஞர் வி.ஏ.கே.வெங்கட ஆனந்தகுமார கிருஷ்ணரங்கா(83), வீணை இசைக்கலைஞர் ரமணிரங்கன்(82) உட்பட 84 கலைஞர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த விருதுடன்   ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவையும் வழங்கப்பட்டன.  

75 வயதுக்கு மேற்பட்ட மற்றும் இதுவரை தேசிய அளவில் கவுரவிக்கப்படாத கலை பிரிவை சேர்ந்த 5 தமிழர்கள் உட்பட 84 கலைஞர்கள் இந்த ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி அமிர்த விரதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் 2023 செப்டம்பர் 16&ம்தேதி சங்கீத நாடக    அகாடமி அமிர்த விரதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

5 தமிழர்கள்

விழாவில் தமிழகத்தை சேர்ந்த கர்நாடக சங்கீத கலைஞர் கவுரி குப்புசுவாமி(91), நாதஸ்வர இசை கலைஞர் சுப்புராயன் சின்னதம்பி(92), நாடக கலைஞர் ராமமூர்த்தி சுந்தரேசன்(84), பரதநட்டிய கலைஞர் வி.ஏ.கே.வெங்கட ஆனந்தகுமார கிருஷ்ணரங்கா(83), வீணை இசைக்கலைஞர் ரமணிரங்கன்(82) உட்பட 84 கலைஞர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த விருதுடன்   ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவையும் வழங்கப்பட்டன. 

மூலக்கதை