திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 14 பழங்கால சிலைகள் கண்டெடுப்பு.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா நெம்மேலி பஞ்சாயத்து குச்சிபாளையம்  கிராமத்தில் பெருமாள் கோயில் அருகே குடிநீர்குழாய்க்காக  பள்ளம் தோண்டியபோது பழங்காலத்து 14  சிலைகள் கண்டுடெடுக்கப்பட்டன. &&&&&&&&&&&&&&&&&&& 15-09-2023 காலை பொக்லைன்  மூலம் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது மண்ணுக்கடியில்  இரண்டு அடி ஆழத்தில் நடராஜர் சிலை இருப்பதை கண்டவர்கள் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். &&&&&&&&&&&&&&&&&&  இதையடுத்து அதிகாரிகளின் முன்னிலையில் தொடர்ந்து பள்ளம் தோண்டியபோது,தோண்ட தோண்ட சுமார் 14 சிலைகள், துருவாச்சி போன்றவை கிடைத்தன. இயந்திரத்தால் நடராஜர் சிலை சேதமடைந்தது. 2 அடி உயரமுள்ள நடராஜர், சிவகாமசுந்தரி, வினாயகர், சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர் மற்றும் சில சுவாமி சிலைகள், திருவாச்சி  என 14 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. &&&&&&&&&&&&&&&&&&&& மேலும், கண்டெடுக்கப்பட்ட சிலைகள் பாதுகாப்பாக பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நன்னிலம் வட்டாட்சியர் ஜெகதீசன் பார்வையிட்டு அய்வு செய்து அவற்றை பாதுகாப்பு காரணங்களுக்காக நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம்  கொண்டுசென்றார். &&&&&&&&&&&&&&&&&&&&&&&& அதன் மதிப்பு பலகோடி இருக்கும் &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& இந்த சிலைகள் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் என கூறப்படுகிறது. இவைகள் எந்த காலத்தை சேர்ந்தது என ஆராய்சி செய்தபிறகே அதன் காலகட்டம் தெரியவரும் என்றும் ஒருவேளை அது ஐம்பொன் சிலைகளாக இருந்தால் அதன் மதிப்பு பலகோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். &&&&&&&&&&&&&&&&&&&&&&&  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "இந்த சிலைகள் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் என தெரியவருகிறது. இதே நன்னிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டியபோது இதேபோல ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. தற்போதும் பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து இந்த கிராமத்துக்கும் தமிழர் வரலாற்றுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. இந்த பகுதியில் அகழாய்வு நடைபெற்றால் தமிழர்களின் வரலாறு வெளிச்சத்துக்கு வரும்" என தெரிவித்துள்ளனர். &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& ஆதி வரலாறு இங்கு தமிழ் வரலாறு &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "எங்கள் கிராமத்தில் இதுபோல பழங்கால சிலைகள் கண்டெடுக்கும்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் தமிழரின் ஏதோ ஒரு மிக அசைக்கமுடியாத தொடர்புடன் வரலாற்றை சுமந்து வாழ்ந்துவருகிறோம் என்பது பெருமையாக உள்ளது. ஆதி வரலாறு இங்கு தமிழ் வரலாறு என்பது தெரியவந்துள்ளது. எங்கள் கிராமத்தின் பெயர், மாவட்டத்தின் பெயர் இதன் மூலம் அறியப்படும்போது நமது பெருமையை உலகறிய வேண்டி ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் நலமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா நெம்மேலி பஞ்சாயத்து குச்சிபாளையம்  கிராமத்தில் பெருமாள் கோயில் அருகே குடிநீர்குழாய்க்காக  பள்ளம் தோண்டியபோது பழங்காலத்து 14  சிலைகள் கண்டுடெடுக்கப்பட்டன.

15-09-2023 அன்று காலை பொக்லைன்  மூலம் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது மண்ணுக்கடியில்  இரண்டு அடி ஆழத்தில் நடராஜர் சிலை இருப்பதை கண்டவர்கள் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அதிகாரிகளின் முன்னிலையில் தொடர்ந்து பள்ளம் தோண்டியபோது,தோண்ட தோண்ட சுமார் 14 சிலைகள், துருவாச்சி போன்றவை கிடைத்தன. இயந்திரத்தால் நடராஜர் சிலை சேதமடைந்தது. 2 அடி உயரமுள்ள நடராஜர், சிவகாமசுந்தரி, வினாயகர், சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர் மற்றும் சில சுவாமி சிலைகள், திருவாச்சி  என 14 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

மேலும், கண்டெடுக்கப்பட்ட சிலைகள் பாதுகாப்பாக பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நன்னிலம் வட்டாட்சியர் ஜெகதீசன் பார்வையிட்டு அய்வு செய்து அவற்றை பாதுகாப்பு காரணங்களுக்காக நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம்  கொண்டுசென்றார்.

அதன் மதிப்பு பலகோடி இருக்கும்

இந்த சிலைகள் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் என கூறப்படுகிறது. இவைகள் எந்த காலத்தை சேர்ந்தது என ஆராய்சி செய்தபிறகே அதன் காலகட்டம் தெரியவரும் என்றும் ஒருவேளை அது ஐம்பொன் சிலைகளாக இருந்தால் அதன் மதிப்பு பலகோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "இந்த சிலைகள் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் என தெரியவருகிறது. இதே நன்னிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டியபோது இதேபோல ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. தற்போதும் பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து இந்த கிராமத்துக்கும் தமிழர் வரலாற்றுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. இந்த பகுதியில் அகழாய்வு நடைபெற்றால் தமிழர்களின் வரலாறு வெளிச்சத்துக்கு வரும்" என தெரிவித்துள்ளனர்.

ஆதி வரலாறு இங்கு தமிழ் வரலாறு

துகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "எங்கள் கிராமத்தில் இதுபோல பழங்கால சிலைகள் கண்டெடுக்கும்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் தமிழரின் ஏதோ ஒரு மிக அசைக்கமுடியாத தொடர்புடன் வரலாற்றை சுமந்து வாழ்ந்துவருகிறோம் என்பது பெருமையாக உள்ளது. ஆதி வரலாறு இங்கு தமிழ் வரலாறு என்பது தெரியவந்துள்ளது. எங்கள் கிராமத்தின் பெயர், மாவட்டத்தின் பெயர் இதன் மூலம் அறியப்படும்போது நமது பெருமையை உலகறிய வேண்டி ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் நலமாக இருக்கும்" என தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை