தஞ்சையில் தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு மாநாடு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தஞ்சையில் தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு மாநாடு

 

 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1924ஆம் ஆண்டு சிந்து சமவெளிப் பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் இந்தியாவின் மிகத் தொன்மையான நாகரிகம் சிந்துவெளி நாகரிகமே என்பதை பிரித்தானிய இந்திய அரசின் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் கண்டறிந்து வெளிப்படுத்தினார். அதே நூற்றாண்டில் 1905ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்திய ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியா இந்தியாவின் மிகப்பழமையான நாகரிகம் அது என்பதை கண்டறிந்தார். ******************************* 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வைகை ஆற்றின் கரையில் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வின் மூலம் “சங்க இலக்கியக் குறிப்புகளும், கீழடியில் கிடைத்த தடயங்களும் ஒத்திருக்கின்றன” என்பதையும் தமிழரின் நகர்ப்புற நாகரிகத்தின் முதல் தடயம் கீழடி என்பதையும் கண்டறிந்தனர். ******************************* கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பு உலகையே வியப்பில் ஆழ்த்தியதைப் போலவே இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வைகை நாகரிகத்தின் கண்டுபிடிப்பு உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ***************************** தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல், அரிக்கமேடு, பூம்புகார், முசிறி (கேரளம்) போன்ற பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலம் உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பது நிலை நிறுத்தப்பட்டுவிட்டது. நமது தொன்மையின் சிறப்பையும் பெருமையையும் உலகமே வியந்து பாராட்டுகிறது. **************************** இத்தகைய தொன்மைக்கும் பெருமைக்கும் உரிய தமிழர்கள் எத்தனை பேர் இந்த உண்மையை அறிந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாகும். எனவே, அனைத்துத் தமிழர்களும் நமது வரலாற்றுத் தொன்மையை அறிந்துகொண்டு பெருமித உணர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் உலகத் தமிழர் பேரமைப்பு தனது 10ஆம் ஆண்டு மாநாட்டினை “தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடாக” நடத்தவிருக்கிறது. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 23 சனி, 24 ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் தஞ்சையில் இம்மாநாட்டினை நடத்தத் திட்டமிட்டுள்ளது. ***************************** கண்காட்சி **************************** சிந்துவெளி நாகரிகம், தமிழ்நாட்டில் தொல்லாய்வு நடைபெற்ற இடங்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட தொல் தமிழர் நாகரிகத் தடயங்களின் படங்கள், அவற்றைப் பற்றிய குறிப்புகள் மற்றும் மறைந்துபோன நெல் வகைகள் போன்றவை இடம்பெறும் தமிழர் தொல் வரலாற்றுக் கண்காட்சி அமைக்கப்படவிருக்கிறது. தமிழர் கண்களுக்கும், கருத்திற்கும் விருந்தளிக்கும் அரியதொரு கண்காட்சி ஆகும். **************************** இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழறிஞர்களும், தொல்லாய்வு அறிஞர்களும் பங்கேற்று தமிழர்களின் தொன்மை வரலாற்றுச் சிறப்பினை எடுத்துரைக்கவிருக்கிறார்கள்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1924ஆம் ஆண்டு சிந்து சமவெளிப் பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் இந்தியாவின் மிகத் தொன்மையான நாகரிகம் சிந்துவெளி நாகரிகமே என்பதை பிரித்தானிய இந்திய அரசின் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் கண்டறிந்து வெளிப்படுத்தினார். அதே நூற்றாண்டில் 1905ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்திய ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியா இந்தியாவின் மிகப்பழமையான நாகரிகம் அது என்பதை கண்டறிந்தார்.

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வைகை ஆற்றின் கரையில் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வின் மூலம் “சங்க இலக்கியக் குறிப்புகளும், கீழடியில் கிடைத்த தடயங்களும் ஒத்திருக்கின்றன” என்பதையும் தமிழரின் நகர்ப்புற நாகரிகத்தின் முதல் தடயம் கீழடி என்பதையும் கண்டறிந்தனர்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பு உலகையே வியப்பில் ஆழ்த்தியதைப் போலவே இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வைகை நாகரிகத்தின் கண்டுபிடிப்பு உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல், அரிக்கமேடு, பூம்புகார், முசிறி (கேரளம்) போன்ற பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலம் உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பது நிலை நிறுத்தப்பட்டுவிட்டது. நமது தொன்மையின் சிறப்பையும் பெருமையையும் உலகமே வியந்து பாராட்டுகிறது.

இத்தகைய தொன்மைக்கும் பெருமைக்கும் உரிய தமிழர்கள் எத்தனை பேர் இந்த உண்மையை அறிந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாகும். எனவே, அனைத்துத் தமிழர்களும் நமது வரலாற்றுத் தொன்மையை அறிந்துகொண்டு பெருமித உணர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் உலகத் தமிழர் பேரமைப்பு தனது 10ஆம் ஆண்டு மாநாட்டினை “தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடாக” நடத்தவிருக்கிறது. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 23 சனி, 24 ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் தஞ்சையில் இம்மாநாட்டினை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

கண்காட்சி தமிழர் நாகரிகத் தடயங்களின்

சிந்துவெளி நாகரிகம், தமிழ்நாட்டில் தொல்லாய்வு நடைபெற்ற இடங்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட தொல் தமிழர் நாகரிகத் தடயங்களின் படங்கள், அவற்றைப் பற்றிய குறிப்புகள் மற்றும் மறைந்துபோன நெல் வகைகள் போன்றவை இடம்பெறும் தமிழர் தொல் வரலாற்றுக் கண்காட்சி அமைக்கப்படவிருக்கிறது. தமிழர் கண்களுக்கும், கருத்திற்கும் விருந்தளிக்கும் அரியதொரு கண்காட்சி ஆகும்.


இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழறிஞர்களும், தொல்லாய்வு அறிஞர்களும் பங்கேற்று தமிழர்களின் தொன்மை வரலாற்றுச் சிறப்பினை எடுத்துரைக்கவிருக்கிறார்கள்.

மூலக்கதை