தமிழில் ஒரு ‛கான்ஜூரிங்' உருவாகிறது

தினமலர்  தினமலர்
தமிழில் ஒரு ‛கான்ஜூரிங் உருவாகிறது

ஹாலிவுட்டில் மிரட்டிய பேய் படம் ‛கான்ஜூரிங்'. தற்போது தமிழில் ‛கான்ஜூரிங் கண்ணப்பன்' என்ற படம் தயாராகிறது. அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் இந்த படத்தில் சதீஷ், ரெஜினா முதன்மை வேடத்தில் நடிக்க, நாசர், சரண்யா, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

'கான்ஜூரிங் கண்ணப்பன்' பற்றி பேசிய இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர், "ரசிகர்களுக்கு வித்தியாசமான புதுவித அனுபவத்தை கொடுப்பதோடு நல்ல பொழுதுப்போக்காகவும் இப்படம் இருக்கும். முக்கியமாக குழந்தைகள் பார்த்து ரசிக்கும் வகையிலும் நகைச்சுவை, திகில், பேன்டசி கலந்த படமாக இதை உருவாக்கியுள்ளோம். இப்படம் அனைத்து வயதினரையும் நிச்சயம் கவரும்," என்று கூறினார்.

மூலக்கதை