'புஷ்பா 2' சாதனையை மிஞ்சி 'லியோ'க்கு வரவேற்பு

தினமலர்  தினமலர்

இந்தியத் திரையுலகத்தில் பான் இந்தியா ஸ்டார்கள் என தெலுங்கில் கூட நான்கைந்து பேர் வந்துவிட்டார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் இன்னும் அப்படி ஒரு ஸ்டார் கூட அந்த உயரத்திற்குப் போகவில்லை. அதே சமயம், தமிழ் ஸ்டார்கள் படைக்கும் சமூக வலைத்தள, யு டியூப் சாதனைகள் பான் இந்தியா ஸ்டார்களை விடவும் அதிகமாக இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் தெலுங்கு போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அந்த போஸ்டருக்கு அரை மணி நேரத்திற்குள்ளாக 10 லட்சம் லைக்குகள் விஜய்யின் இன்ஸ்டாகிராம் தளத்தில் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு அல்லு அர்ஜுன் அவருடைய தளத்தில் பதிவிட்ட 'புஷ்பா 2' போஸ்டருக்கு 10 லட்சம் லைக்குகள் 33 நிமிடங்களில் கிடைத்திருந்தது.

இத்தனைக்கும் அல்லு அர்ஜுனுக்கு இன்ஸ்டாகிராம் தளத்தில் 22 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். விஜய்க்கு 8 மில்லியன் பாலோயர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

மூலக்கதை