ஆதாரம் இருந்தால் காட்டுங்க சவுத்ரி' லோக்சபாவில் சீறிய அமித் ஷா

தினமலர்  தினமலர்
ஆதாரம் இருந்தால் காட்டுங்க சவுத்ரி லோக்சபாவில் சீறிய அமித் ஷாபுதுடில்லி, லோக்சபாவில் நேற்று காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையே காரசார விவாதம்நடந்தது.

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, காங்கிரசைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது:

ராஜிவ், நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் தலைமையிலான காங்., அரசுகள், இந்த மசோதாவை நிறைவேற்ற முயன்றன. லோக்சபாவில் சில நேரங்களில் நிறைவேற்றப்பட்டாலும், ராஜ்யசபாவில் நிறைவேற்ற முடியவில்லை.

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது. இதை சுட்டிக்காட்டி, பிரதமருக்கு சோனியா கடிதமும் எழுதி உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதிலடி கொடுத்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் ஒருபோதும் நிறைவேறவில்லை. மேலும், பழைய மசோதா நிலுவையிலும் இல்லை. 2014ல், 15வது லோக்சபா கலைக்கப்பட்டவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது.

சபையில் கூறியதை நிரூபிக்க ஏதேனும் ஆதாரம் இருந்தால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அவரது பேச்சை சபைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

புதுடில்லி, லோக்சபாவில் நேற்று காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையே காரசார விவாதம்நடந்தது.லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு 33

மூலக்கதை