பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் பரவசம்

தினமலர்  தினமலர்
பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் பரவசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

டோக்கியோ: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல உலக நாடுகளில் அங்குள்ள இந்தியர்கள் விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.

உலகெங்கும் வணங்கப்படும் கடவுளாக விநாயகர் எப்போதும் இருந்து வந்திருக்கிறார் என்கிறது வரலாறு. ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பர்மா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜாவா, கம்போடியா, சீனா, மியான்மர், மங்கோலியா, வியட்நாம், கொரியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தியர்கள் பலரும் வசிக்கின்றனர். அந்த நாடுகளில் ஹிந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் உலகம் முழுதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்நாடுகளில் உள்ள இந்தியர்கள் மட்டுமல்லாமல், உள்ளூர்வாசிகளும் விநாயகரை கையெடுத்து கும்பிட்டு தரிசனம் மேற்கொண்டனர். அந்த வகையில் ஜப்பானில் நூற்றுக்கணக்கான அந்நாட்டு மக்கள் கூடி விநாயகரை வழிபடும் வீடியோ வைரலாகியுள்ளது.

டோக்கியோ: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல உலக நாடுகளில் அங்குள்ள இந்தியர்கள் விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.உலகெங்கும் வணங்கப்படும் கடவுளாக விநாயகர் எப்போதும் இருந்து

மூலக்கதை