பாகிஸ்தானில் விண்ணை முட்டும் பெட்ரோல், டீசல் விலை: மக்கள் அதிர்ச்சி

தினமலர்  தினமலர்
பாகிஸ்தானில் விண்ணை முட்டும் பெட்ரோல், டீசல் விலை: மக்கள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரி இன்று(செப்.,16) மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 ரூபாய் உயர்ந்து, ரூ.331க்கும், டீசல் லிட்டருக்கு 17 ரூபாய் உயர்ந்து ரூ. 329க்கும் விற்பனை செய்யப்படுவதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் பார்லிமென்டை கலைக்க, அப்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரை செய்தார். இதை ஏற்று பார்லிமென்டை கலைத்து, அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார். பார்லி., கலைக்கப்பட்ட நிலையில் இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

ஊழல் வழக்கில் ,இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே வேளை, ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

தேர்தலில் வெற்றிபெறும்பட்சத்தில் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராகும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி நிலைமை மோசமடைந்து வருவதால் அந்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

முதல் முறை

அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 17 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 305 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதல் வரியுடன் சேர்த்து ஒரு லிட்டர் 331 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் ஒரு லிட்டர் டீசல் 311 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வரியுடன் சேர்த்து 329 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாகிஸ்தான் வரலாற்றில் உச்சபட்ச விலையாக ஒரு லிட்டர் பெட்ரோல் 331 ரூபாய்க்கும், டீசல் 329 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரி இன்று(செப்.,16) மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 ரூபாய் உயர்ந்து, ரூ.331க்கும், டீசல்

மூலக்கதை