விமான நிலையத்தில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்ட அமெரிக்க அதிகாரிகள்: வீடியோ வைரல்

தினமலர்  தினமலர்
விமான நிலையத்தில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்ட அமெரிக்க அதிகாரிகள்: வீடியோ வைரல்

வாஷிங்டன்: அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் அதிகாரிகள், பைகளில் இருந்து பணம் மற்றும் பொருட்களை திருடும் வீடியோ வைரலாகி உள்ளது.

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூன் 29 அன்று நடந்த இந்த திருட்டு சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருட்டில் ஈடுபட்டவர்கள், ஜோஸ் கன்ஜலேஜ்(20) மற்றும் லபேரியஸ் வில்லியம்ஸ்(33) என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய எக்ஸ்ரே இயந்திரத்தில் வைக்கும் போது, அதனை இருவரும் சோதனை செய்கின்றனர். அப்போது ஒவ்வொரு பைகளிலும் கையை விட்டு பார்க்கும் இருவரும், அதில் பர்ஸ்களில் இருந்து கிடைக்கும் பணத்தை திருடி தங்களது பைகளில் வைத்து கொள்கின்றனர்.

கையில் கிடைத்த சில பொருட்களை திருடி வைத்தது, அங்கிருந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் தொடர்புடைய எலிசபெத் பல்ஸ்டர் என்பவரும் ஜூலையில் கைதானார். இவர்களிடம் நடத்திய விசாரணையில், தினமும் சராசரியாக ஆயிரம் அமெரிக்க டாலர் அளவுக்கு பணம் திருடியதை ஒப்புக் கொண்டனர்.

வாஷிங்டன்: அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் அதிகாரிகள், பைகளில் இருந்து பணம் மற்றும் பொருட்களை திருடும் வீடியோ வைரலாகி உள்ளது.அமெரிக்காவின் மியாமி

மூலக்கதை