ஓய்வூதிய திட்ட வழக்கில் அப்பீல்; காவலர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

தினமலர்  தினமலர்
ஓய்வூதிய திட்ட வழக்கில் அப்பீல்; காவலர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


'தமிழகத்தில், 2003ல் பணியில் சேர்ந்த காவலர்களை, பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில், 2003 டிச., 1ம் தேதி, காவல் துறையில், 8,431 ஆண் காவலர்கள் புதிதாக பணியில் சேர்ந்தனர். பணியில் சேர ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்தனர்.

பணிக்கு விண்ணப்பித்த போது, பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது என, அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அவர்களுக்கு பின், 2003 மார்ச், 3ம் தேதி விண்ணப்பித்த, பெண் காவலர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்தனர்.

ஆனால், 8,431 காவலர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கே, 2004 ஜன., 1 முதல் தான் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.

எனவே, தங்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என, 8,431 காவலர்களில் 25 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

- நமது நிருபர் -

'தமிழகத்தில், 2003ல் பணியில் சேர்ந்த காவலர்களை, பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய முடிவு

மூலக்கதை