கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர்கள் 'டம்மி' பதவிகளுக்கு இடமாற்றம்

தினமலர்  தினமலர்
கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர்கள் டம்மி பதவிகளுக்கு இடமாற்றம்பெஞ்சில் ஆஜரான பெரியவர்கள், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். குப்பண்ணா தந்த கொழுக்கட்டையை ருசித்தபடியே, ''அதிரடி மாற்றங்கள் தொடரும்னு சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டுல, மாநில, மாவட்ட அளவிலான கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் செயல்படுது... ஒவ்வொரு பிரிவும், தலா ஒரு கூடுதல் பதிவாளரின் தலைமையில இயங்குது பா...

''இதுல, மாநில தலைமை கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் உட்பட, 10 கூடுதல் பதிவாளர்களை சமீபத்துல அதிரடியா இடமாற்றம் பண்ணிட்டாங்க... இதுல, முக்கிய பதவிகள்ல இருந்த அஞ்சு பேர், 'டம்மி' பதவிகளுக்கு மாத்தப்பட்டிருக்காங்க பா...

''அடுத்து, இணை பதிவாளர்கள் மாற்றத்துக்கான பட்டியல் தயாராகிட்டு வருது... இதனால, துறைக்குள்ள பலரும் கலக்கத்துல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''சமூக விரோத கும்பலோடு கைகோர்த்து, 'கல்லா' கட்டுதாரு வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறிய பெரியசாமி அண்ணாச்சியே தெடர்ந்தார்...

''சேலம் மாவட்டம், மேச்சேரி தனிப்பிரிவு ஏட்டு, தன் வீட்டுலயே ஷெட் அமைச்சு, சண்டை சேவல்களை வளர்த்து, விற்பனை பண்ணுதாரு...

''போலீஸ் நடமாட்டம் இல்லாத பகுதியா அடையாளம் காட்டி, அங்கன சேவல் சண்டை நடத்தவும், உதவியா இருக்காரு வே...

பெஞ்சில் ஆஜரான பெரியவர்கள், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். குப்பண்ணா தந்த கொழுக்கட்டையை ருசித்தபடியே, ''அதிரடி மாற்றங்கள் தொடரும்னு சொல்றாங்க பா...''

மூலக்கதை