கறவை மாடுகளுக்கு காப்பீடு; விரைவில் துவங்குகிறது ஆவின்

தினமலர்  தினமலர்
கறவை மாடுகளுக்கு காப்பீடு; விரைவில் துவங்குகிறது ஆவின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


சென்னை: கறவை மாடுகளுக்கும், பால் ஏஜன்ட்களுக்கும் காப்பீடு வழங்கும் பணியை, ஆவின் நிர்வாகம் துவக்க உள்ளது.

கால்நடைகள் இழப்பால் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், சிறிய அளவிலான பால் உற்பத்தியாளர்கள், தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, கால்நடைகளுக்கான காப்பீட்டு திட்டத்தை, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதில், பசுக்கள், எருமைகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவற்றுக்கு காப்பீடு செய்யப்படுகின்றன. கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்யும் பணியை, ஆவின் நிர்வாகம் மேற்கொள்கிறது. காப்பீடு கட்டணமாக, 600 - 700 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.

சென்னை: கறவை மாடுகளுக்கும், பால் ஏஜன்ட்களுக்கும் காப்பீடு வழங்கும் பணியை, ஆவின் நிர்வாகம் துவக்க உள்ளது.கால்நடைகள் இழப்பால் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு நஷ்டம்

மூலக்கதை