ஆசிய கோப்பை பைனல்: இலங்கை அணி தடுமாற்றம்

தினமலர்  தினமலர்

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் பைனலில் ‛டாஸ்' வென்ற முதலில் பேட்டிங் செய்யும் இலங்கை அணி 10 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 36 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணியின் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இலங்கையில் நடக்கிறது. ‛சூப்பர்-4' சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த, இந்தியா, இலங்கை அணிகள் பைனலுக்கு முன்னேறின. இன்று (செப்.,17) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கும் பைனலில் இரு அணிகளும் மோதுகின்றன. ‛டாஸ்' வென்ற இலங்கை அணி ‛பேட்டிங்' தேர்வு செய்தது. பைனலில் வெற்றிப்பெற்று எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியது.

துவக்கம் முதலே இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். முதல் ஓவரிலேயே பும்ராவிடம் இலங்கை அணி முதல் விக்கெட்டை இழந்தது. பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 6 விக்கெட்களுக்கு 12 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.

இலங்கை அணி 10 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்திய அணி விபரம்:

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் பைனலில் ‛டாஸ்' வென்ற முதலில் பேட்டிங் செய்யும் இலங்கை அணி 10 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 36 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இந்திய

மூலக்கதை