மீனாவை நேரில் வாழ்த்திய சரத்குமார் - ராதிகா!

தினமலர்  தினமலர்
மீனாவை நேரில் வாழ்த்திய சரத்குமார்  ராதிகா!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனவர் மீனா. கடந்த 33 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வரும் மீனா, செப்டம்பர் 16ம் தேதியான நேற்று தன்னுடைய 47வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அப்போது சினேகா உள்ளிட்ட பல திரை உலகினர் அவரை நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் நடிகர் சரத்குமார்- ராதிகா ஆகியோரும் மீனாவுக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். நடிகை மீனா, சரத்குமாருடன் நாட்டாமை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை