அரிட்டாபட்டி, முதலைக்குளம் மலைகளுக்கு பாதுகாப்பு வேலி

தினமலர்  தினமலர்
அரிட்டாபட்டி, முதலைக்குளம் மலைகளுக்கு பாதுகாப்பு வேலி

மதுரை, -மாநில தொல்லியல் துறை சார்பில் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க முதலைக்குளம், அரிட்டாபட்டி மலைகளைச் சுற்றி வேலி அமைத்து சீரமைப்பு பணி நடக்கிறது.

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 இடங்கள், மதுரையில் உசிலம்பட்டி, விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் சமணர் மலை, மேலுார் அரிட்டாபட்டி சமணர் மலைகளை பாதுகாக்க தமிழக அரசு ரூ.3 கோடி ஒதுக்கியுள்ளது. முதலைக்குளம் சமணர் மலை 2ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. மலையில் சமணர் படுக்கை, பிராமி எழுத்துகள் உள்ளன. அரிட்டாபட்டி மலைப்படுகை 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. இங்கு தீர்த்தங்கரர் சிலை உள்ளது.

இந்த இரு மலைகளுக்கு செல்வதற்கான ரோட்டு பாதை சீரமைப்பு, மலையைச் சுற்றி வேலி, பார்வையாளர்களுக்கான இருக்கை, சோலார் மின்விளக்கு, கழிப்பறை, காவலர் அறைகள் அமைக்கப்பட உள்ளது. 3 மாதத்தில் பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

மதுரை, -மாநில தொல்லியல் துறை சார்பில் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க முதலைக்குளம், அரிட்டாபட்டி மலைகளைச் சுற்றி வேலி அமைத்து சீரமைப்பு பணி நடக்கிறது.தமிழகத்தில் திருவண்ணாமலை

மூலக்கதை