திருக்குறள் முற்றோதல் செய்து தஞ்சை பெண் சாதனை
பாடப்புத்தகங்களில் வரும் செய்யுள்களை போல திருக்குறளை படிப்பதை மாணவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என தமிழார்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். திருக்குறள் என்பது வாழ்க்கை தத்துவத்தை விவரிப்பதாக உள்ளது. முக்காலத்தையும் அறிவிக்கிறதாக உள்ளது. திருக்குறளில் சொல்லப்படாத பொருள் இல்லை என்பதை இப்போதைய இளைய தலைமுறை அறியத்தொடங்கியுள்ளது.
இதனாலேயே திருக்குறள் உலகபொதுமறை என போற்றப்படுகிறது. தற்போது அதிக மொழிகளில் மொழிபெயர்க்கடும் நூலாகவும் திருக்குறள் உள்ளது. இதன் கருத்தாழ்ந்த பொருளை உணரும்போது அதை உணரும் யாருக்கும் மேனி சிலிர்ப்பது நிச்சயமே. அது அவர்கள் வாழ்க்கையையும் மாற்றுவதும் சத்தியமே. உலகத்தலைவர்கள் எல்லோரும் திருக்குறளின் பொருளறிய தொடங்கி அதைக்குறித்து பேசி வருகின்றனர். திருக்குறளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் என தொண்டாற்றி வருகிறது உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம். அதனால், திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சிகளையும், அதற்காக மாணவர்களுக்கு பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. திருக்குறள் முற்றோதல் செய்பவர்களை கண்டறிந்து பாராட்டியும் கவுரப்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் திருக்குறள் முற்றோதலில் சிலர் சாதனை படைத்து வியக்கவைத்து வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூரை சேர்ந்த திருமதி ச.ஆனந்தி தற்போது திருக்குறள் முற்றோதலில் சாதனை படைத்து புருவங்களை உயர்த்தவைத்துள்ளார். இவர் தான் மட்டும் 1330 குறளை படித்து முற்றோதல் செய்யாமல் தன்னுடைய 2 குழந்தைகளுக்கும் பயிற்சி அளித்து அவர்களையும் திருக்குறள் முற்றோதல் செய்யவைத்து சாதனை படைத்துள்ளார். அதனால், அவர் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் தஞ்சை மாவட்ட முற்றோதல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளர் கோபிசிங் தலைமையில் இவர் பயிற்சி அளிக்க உள்ளார். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முற்றோதல் பயிற்சி அளிக்க இவரை அணுகலாம் என உலக திருக்குறல் முற்றோதல் இயக்கம் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகள், முற்றோதலுக்கு தனி வகுப்பு தேவைப்படுவோர் , வெளிநாடு வாழ் தஞ்சை மாவட்டத்து அன்பர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு , தங்களுக்கு முற்றோதல் பயிற்சிபெற இவருக்கு ஒரு நன்கொடை கொடுத்து பயிற்சி பெறலாம். &&&&&&&&&& உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சிறப்புகள் திருக்குறள் முற்றோதல் முடித்த அந்தந்த மாவட்டத்துக்காரர் ஒருவரை திருக்குறள் பயிற்சியாளராக அடையாளம் கண்டு, உரிய பயிற்சியளித்து அறிமுகம் செய்கிறது. திருக்குறள் முடித்த ஒருவருக்கு அந்தந்த மாவட்டத்தில் ஒரு தமிழார்வம் உள்ள அறம்சார்ந்த புரவலரை அடையாளம் கண்டு திருக்குறள் புரவலராக நியமிப்பது, அவர்களது வணிகத்தை விளம்பரத்தில் சேர்த்து ஊக்குவிப்பது. இவர்களது உதவியில் முற்றோதல் பயிற்சியாளர் அரசுப்பள்ளிகளுக்கு இலவசப் பயிற்சி வழங்குவார். மாவட்டத்தில் ஏற்கனவே சிறப்பாக செயல்படும் திருக்குறள் மன்றம், திருக்குறள் ஆர்வலரை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகக்கொண்டு அந்த மாவட்டத்தில் இலவச நூல்கள் வழங்கி ஆண்டுக்கு குறைந்தது 100 மாணவர்களை திருக்குறள் முற்றோதல் செய்ய இலவசப் பயிற்சியளிப்பது. திருக்குறள் முற்றோதல் பயிற்சி முடித்த மாணவர்களை மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கும் முற்றோதல் சான்றிதழ் மற்றும் ரூபாய் 15,000 பரிசு பெற ஊக்கப்படுத்துவது. ஒருவர் கூட திருக்குறள் முற்றோதல் செய்ய முன்வராத மாவட்டங்களில் அதிக கவனம் எடுத்து ஆர்வத்தை அதிகப்படுத்துவது. முற்றோதல் என்பது இளநிலை, இது முடிந்ததும் விட்டுவிடாமல், திருக்குறள் முற்றோதல் முடித்தவர்கள் பொருள் உணர்ந்து வாழ்வில் பின்பற்ற , வெற்றியாளர்களாகத் திகழ கல்லூரி முடிப்பதற்குள் முதுநிலைத் தேர்வில் வெற்றிபெற தொடர்ந்து வழிகாட்டுவது. உங்கள் ஊரிலும் ஒரு முழுநேர, பகுதிநேர முற்றோதல் முடித்தவர் உங்கள் மாவட்ட மக்களுக்கு முற்றோதல் செய்யத் தேவையா? அருமையான செயலாக்கம் கொண்ட இந்த திருக்குறள் பரவலாக்கல் திட்டத்திற்கு துணைநிற்க விருப்பம் உள்ள புரவலரா? உங்கள் பெற்றோர் பெயரில், உங்கள் பெயரில் ஊருக்கு ஏதும் நல்லது செய்ய ஒரு வாய்ப்புக்கு காத்திருப்பவரா? தொடர்புகொள்ளுங்கள். வழிகாட்ட தயாராக இருக்கிறது உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம். ஒரு கை ஓசை எழுப்பாது.. கைகோருங்கள்.. நன்கொடை பெறுவதில்லை.. முழுமையாக விளைவுகள் சார்ந்த நடைமுறைகளை திட்டமிடுவதும், வழிகாட்டுவதும், ஒருங்கிணைப்பதும், தேவைகளை அடையாளம் கண்டு தொடர்பு படுத்திவிடுவதும் மட்டுமே முற்றோதல் இயக்க பணி .. தொடர்புக்கு...... உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் [email protected]பாடப்புத்தகங்களில் வரும் செய்யுள்களை போல திருக்குறளை படிப்பதை மாணவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என தமிழார்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். திருக்குறள் என்பது வாழ்க்கை தத்துவத்தை விவரிப்பதாக உள்ளது. முக்காலத்தையும் அறிவிக்கிறதாக உள்ளது.
திருக்குறளில் சொல்லப்படாத பொருள் இல்லை என்பதை இப்போதைய இளைய தலைமுறை அறியத்தொடங்கியுள்ளது.இதனாலேயே திருக்குறள் உலகபொதுமறை என போற்றப்படுகிறது. தற்போது அதிக மொழிகளில் மொழிபெயர்க்கடும் நூலாகவும் திருக்குறள் உள்ளது.
இதன் கருத்தாழ்ந்த பொருளை உணரும்போது அதை உணரும் யாருக்கும் மேனி சிலிர்ப்பது நிச்சயமே. அது அவர்கள் வாழ்க்கையையும் மாற்றுவதும் சத்தியமே.உலகத்தலைவர்கள் எல்லோரும் திருக்குறளின் பொருளறிய தொடங்கி அதைக்குறித்து பேசி வருகின்றனர்.
திருக்குறளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் என தொண்டாற்றி வருகிறது உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம். அதனால், திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சிகளையும், அதற்காக மாணவர்களுக்கு பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. திருக்குறள் முற்றோதல் செய்பவர்களை கண்டறிந்து பாராட்டியும் கவுரப்படுத்தியும் வருகிறது.
அந்த வகையில் திருக்குறள் முற்றோதலில் சிலர் சாதனை படைத்து வியக்கவைத்து வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூரை சேர்ந்த திருமதி ச.ஆனந்தி தற்போது திருக்குறள் முற்றோதலில் சாதனை படைத்து புருவங்களை உயர்த்தவைத்துள்ளார். இவர் தான் மட்டும் 1330 குறளை படித்து முற்றோதல் செய்யாமல் தன்னுடைய 2 குழந்தைகளுக்கும் பயிற்சி அளித்து அவர்களையும் திருக்குறள் முற்றோதல் செய்யவைத்து சாதனை படைத்துள்ளார்.
அதனால், அவர் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் தஞ்சை மாவட்ட முற்றோதல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளர் கோபிசிங் தலைமையில் இவர் பயிற்சி அளிக்க உள்ளார். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முற்றோதல் பயிற்சி அளிக்க இவரை அணுகலாம் என உலக திருக்குறல் முற்றோதல் இயக்கம் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகள், முற்றோதலுக்கு தனி வகுப்பு தேவைப்படுவோர், வெளிநாடு வாழ் தஞ்சை மாவட்டத்து அன்பர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, தங்களுக்கு முற்றோதல் பயிற்சிபெற இவருக்கு ஒரு நன்கொடை கொடுத்து பயிற்சி பெறலாம்.
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சிறப்புகள்
* திருக்குறள் முற்றோதல் முடித்த அந்தந்த மாவட்டத்துக்காரர் ஒருவரை திருக்குறள் பயிற்சியாளராக அடையாளம் கண்டு, உரிய பயிற்சியளித்து அறிமுகம் செய்கிறது.
* திருக்குறள் முடித்த ஒருவருக்கு அந்தந்த மாவட்டத்தில் ஒரு தமிழார்வம் உள்ள அறம்சார்ந்த புரவலரை அடையாளம் கண்டு திருக்குறள் புரவலராக நியமிப்பது, அவர்களது வணிகத்தை விளம்பரத்தில் சேர்த்து ஊக்குவிப்பது. இவர்களது உதவியில் முற்றோதல் பயிற்சியாளர் அரசுப்பள்ளிகளுக்கு இலவசப் பயிற்சி வழங்குவார்.
*மாவட்டத்தில் ஏற்கனவே சிறப்பாக செயல்படும் திருக்குறள் மன்றம், திருக்குறள் ஆர்வலரை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகக்கொண்டு அந்த மாவட்டத்தில் இலவச நூல்கள் வழங்கி ஆண்டுக்கு குறைந்தது 100 மாணவர்களை திருக்குறள் முற்றோதல் செய்ய இலவசப் பயிற்சியளிப்பது.
*திருக்குறள் முற்றோதல் பயிற்சி முடித்த மாணவர்களை மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கும் முற்றோதல் சான்றிதழ் மற்றும் ரூபாய் 15,000 பரிசு பெற ஊக்கப்படுத்துவது. ஒருவர் கூட திருக்குறள் முற்றோதல் செய்ய முன்வராத மாவட்டங்களில் அதிக கவனம் எடுத்து ஆர்வத்தை அதிகப்படுத்துவது.
*முற்றோதல் என்பது இளநிலை, இது முடிந்ததும் விட்டுவிடாமல், திருக்குறள் முற்றோதல் முடித்தவர்கள் பொருள் உணர்ந்து வாழ்வில் பின்பற்ற , வெற்றியாளர்களாகத் திகழ கல்லூரி முடிப்பதற்குள் முதுநிலைத் தேர்வில் வெற்றிபெற தொடர்ந்து வழிகாட்டுவது.
*உங்கள் ஊரிலும் ஒரு முழுநேர, பகுதிநேர முற்றோதல் முடித்தவர் உங்கள் மாவட்ட மக்களுக்கு முற்றோதல் செய்யத் தேவையா? அருமையான செயலாக்கம் கொண்ட இந்த திருக்குறள் பரவலாக்கல் திட்டத்திற்கு துணைநிற்க விருப்பம் உள்ள புரவலரா? உங்கள் பெற்றோர் பெயரில், உங்கள் பெயரில் ஊருக்கு ஏதும் நல்லது செய்ய ஒரு வாய்ப்புக்கு காத்திருப்பவரா?
*தொடர்புகொள்ளுங்கள். வழிகாட்ட தயாராக இருக்கிறது உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம். ஒரு கை ஓசை எழுப்பாது.. கைகோருங்கள்.. நன்கொடை பெறுவதில்லை.. முழுமையாக விளைவுகள் சார்ந்த நடைமுறைகளை திட்டமிடுவதும், வழிகாட்டுவதும், ஒருங்கிணைப்பதும், தேவைகளை அடையாளம் கண்டு தொடர்பு படுத்திவிடுவதும் மட்டுமே முற்றோதல் இயக்க பணி ..
தொடர்புக்கு......
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
https://thirukkural.valaitamil.com/