தல்லாகுளம் பெருமாள் கோயிலில் செப்.17ல் பிரம்மோற்ஸவ விழா

தினமலர்  தினமலர்
தல்லாகுளம் பெருமாள் கோயிலில் செப்.17ல் பிரம்மோற்ஸவ விழா

அழகர்கோவில், -மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் பிரம்மோற்ஸவ தெப்பத்திருவிழா செப்.17 முதல் 27 வரை நடக்கவுள்ளது.
துணை ஆணையர்
ராமசாமி கூறியதாவது: புரட்டாசி திருவோண நட்சத்திரத்தை மையமாக வைத்து இந்த பிரம்மோற்ஸவ விழா நடக்க உள்ளது. முதல் நாளான செப்.16 அன்று
அங்குரார்பணம், செப்.17 காலை 8:15 - 9:00க்குள் கொடியேற்றம், செப்.27 வரை காலை, மாலை பல்வேறு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்ஸவம் செப்.27 காலை 10:30 முதல் மதியம் 1:30க்குள், மற்றும் மாலை 6:00க்கு மேல் நடைபெறும். செப்.28ல் உற்ஸவ சாந்தி நிகழ்ச்சியுடன் புரட்டாசி திருவிழா நிறைவு பெறும், என்றார்.

அழகர்கோவில், -மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் பிரம்மோற்ஸவ தெப்பத்திருவிழா செப்.17 முதல் 27 வரை நடக்கவுள்ளது.துணை ஆணையர் ராமசாமி கூறியதாவது: புரட்டாசி திருவோண

மூலக்கதை