தேனியில் நிபா வைரஸ் தடுப்பு பணி: எல்லையில் 4650 பேருக்கு பரிசோதனை

தினமலர்  தினமலர்
தேனியில் நிபா வைரஸ் தடுப்பு பணி: எல்லையில் 4650 பேருக்கு பரிசோதனை



தேனி, - 'மாவட்டத்தில் லோயர்கேம்ப், கம்பம் மெட்டு, போடி மெட்டு சோதனை சாவடிகளில் நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய இரு நாட்களில் 4650 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையில் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்திட பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. லோயர் கேம்ப், கம்பம் மெட்டில் வட்டார மருத்துவ அலுவலர் முருகன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

போடி மெட்டில் டொம்புச்சேரி வட்டார மருத்துவ அலுவலர் தண்டபாணி, சுகாதார மேற்பார்வையாளர் முரளீதரன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி சார்பில் ப்ளீச்சிங் பவுடர் வாகனங்களுக்கு தெளிக்கப்படுகிறது. மூன்று சோதனை சாவடிகளிலும் 2 நாட்களில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர்களை ஸ்கிரீனிங் செய்யப்பட்டு உள்ளனர்.

துணை இயக்குனர் போஸ்கோராஜா கூறியதாவது: கேராளவில் இருந்து வரும் கார், பஸ், லாரி, டூவீலர்களில் வரும் பயணிகளையும் பரிசோதனை செய்யப்படுகின்றனர். அறிகுறி கண்டறியப்பட்டால் தமிழகத்திற்கு நுழைய தடை விதித்து, திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

கேராளவில் தீவிர கண்காணிப்பு உள்ளதால், இதுவரை யாரும் அறிகுறியுடன் வரவில்லை. 2 நாட்களில் வாகனங்களில் தமிழகத்திற்கு வந்த 4650 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு அறிகுறி இல்லாதது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தனி காய்ச்சல் வார்டும், மருத்துவமனைகளிலும் தனி வார்டுகளும் கலெக்டர் உத்தரவில் துவக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அதனால் மாவட்ட பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை.'', என்றார்.

தேனி, - 'மாவட்டத்தில் லோயர்கேம்ப், கம்பம் மெட்டு, போடி மெட்டு சோதனை சாவடிகளில் நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய இரு நாட்களில் 4650 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.கேரளாவில் நிபா

மூலக்கதை