மதுரையில் இந்திய நரம்பியல் மாநாடு

தினமலர்  தினமலர்
மதுரையில் இந்திய நரம்பியல் மாநாடுமதுரை -இந்திய நரம்பியல் மருத்துவ அகாடமி, மதுரை நரம்பியல் மருத்துவ அகாடமி சார்பில் மதுரை ஓட்டல் மேரியாட்டில் 4 நாள் அகில இந்திய மூளை நரம்பியல் துறை மாநாடு நேற்று துவங்கியது.

டாக்டர் சீனிவாசன் துவக்கி வைத்தார். தலைவலி குறித்தும், மூளை நரம்புகளில் உருவாகும் நோய்கள் குறித்தும் டில்லி டாக்டர் காமாட்சி தமிஜா பேசினார். நரம்பியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், அதுகுறித்த தரவுகள், கருத்துகளை மூத்த டாக்டர்கள் விவரித்தனர். செப்.,17 வரை நடக்கவுள்ள இம்மாநாட்டில் மூளை நரம்பியல் துறையின் நவீன தொழில் நுட்பங்கள், ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றுஉள்ளனர்.

அகாடமி தேசிய தலைவர் ககந்தீப் சிங், செயலாளர் மீனாட்சி சுந்தரம், அமைப்புச்செயலாளர் மணிவண்ணன், உலக நரம்பியல் கழகத் தலைவர் க்ரிஷால்டு, பொருளாளர் ஸ்டீவன் லுாயிஸ், மதுரை நரம்பியல் கழகத் தலைவர் மெய்கண்டான் ஏற்பாடுகளை செய்தனர்.

மதுரை -இந்திய நரம்பியல் மருத்துவ அகாடமி, மதுரை நரம்பியல் மருத்துவ அகாடமி சார்பில் மதுரை ஓட்டல் மேரியாட்டில் 4 நாள் அகில இந்திய மூளை நரம்பியல் துறை மாநாடு நேற்று துவங்கியது.டாக்டர்

மூலக்கதை