புதுச்சேரியில் மாற்றத்திற்கான மாநில நிறுவனம்... உதயமாகிறது; தொலைநோக்கு வளர்ச்சிக்கு உத்தரவாதம்

தினமலர்  தினமலர்
புதுச்சேரியில் மாற்றத்திற்கான மாநில நிறுவனம்... உதயமாகிறது; தொலைநோக்கு வளர்ச்சிக்கு உத்தரவாதம்


சின்ன சிறிய மாநிலமாக புதுச்சேரி இருந்தாலும் தனித்தன்மையுடன் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றது.

மாநிலத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகரும் வகையில் அடுத்த 25 ஆண்டுகளில் எட்ட வேண்டிய இலக்குகளை புதுச்சேரி அரசு, துறை ரீதியாக உருவாக்கி பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்துள்ளது.

2047ம் ஆண்டினை இலக்காக கொண்டு இந்த தொலைநோக்கு பார்வை திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புதுச்சேரி மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நிதி ஆயோக்கின் கீழ்மாற்றத்திற்கான மாநில நிறுவனம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணியாளர்கள், உட்கட்டமைப்புகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கு புதுச்சேரி அரசும் பச்சை கொடி காட்டியுள்ளது.

என்ன நன்மை



மாநிலத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் அதன் வலிமையை உணர்ந்து அதன் இலக்குகளை வரையறுத்து பயணித்தால் தான் நாட்டின்வளர்ச்சி சாத்தியமாகும். ஆனால் பல மாநிலங்கள், நாட்டின் வளர்ச்சி பாதையில் பங்களிக்க முடியாமல் பின் தங்கியுள்ளன. குறிப்பாக, ஆரோக்கியம், கல்வி, உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளில் மாநில அரசுகளின் பொறுப்புகளாக உள்ள நேரத்தில் இலக்குகளை எட்ட முடியாமல் திணறி வருகின்றன.

இது போன்று திணறும் மாநிலங்களின் வளர்ச்சிக்கு, மாற்றத்திற்கான மாநில நிறுவனம் ஒவ்வொரு துறையிலும் சிறந்த விளங்கும் நிபுணர்களின் வழிகாட்டுதல்களுடன்உள்ளது. இதற்காக பல கோடிகளை மத்திய அரசு வழங்க முன்வந்துள்ளது.

எனவே, புதுச்சேரி மாநிலத்தில் அமைய உள்ள,மாற்றத்திற்கான மாநில நிறுவனம், மாநிலத்தின்தொலை நோக்கு திட்டத்தினை வடிவமைப்பதிலும், செயல்படுத்துவதிலும், மத்திய அரசின் உதவிகளை நாடுவதிலும் இந்த நிறுவனம் முக்கிய பங்காற்றும்.

மேற்பார்வை



மாநிலத்தில் தற்போது திட்டத்துறை மாநில வளர்ச்சிக்கு வழிகாட்டி வருகின்றது. திட்டத் துறை இருக்கும்போதே, மாற்றத்திற்கான மாநில நிறுவனமும் நிதி ஆயோக் உதவியுடன் ஏற்படுத்தப்பட உள்ளது.

எனவே இனி, திட்டத் துறை உருவாக்கும் அனைத்து திட்டங்களையும் புதிதாக தோற்றுவிக்கப்பட உள்ள புதிய நிறுவனம் மேற்பார்வை செய்யும் அமைப்பாகவும், ஆலோசனை வழங்கும் நிறுவனமாகவும் இருக்கும்.

ஒன்றா இரண்டா



கர்நாடகா மாநிலத்தில், புதுச்சேரி மாநிலத்தினை போன்றுதிட்ட கமிஷன் இருந்தது. மாற்றத்திற்கான மாநில வளர்ச்சிக்காக நிறுவனம் அம்மாநிலத்தில் ஏற்படுத்தியபோது, திட்ட கமிஷன் பெயர் துாக்கப்பட்டு, கர்நாடகா மாநில வளர்ச்சிக்கான நிறுவனம் என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. அதுபோன்று ஒரே துறையாக கருதலாமா அல்லது தனித்தனியே தொடரலமாக என்பதும் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகி்றது. இது தொடர்பாகவும் விரைவில் இறுதி முடிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சின்ன சிறிய மாநிலமாக புதுச்சேரி இருந்தாலும் தனித்தன்மையுடன் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றது. மாநிலத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகரும் வகையில் அடுத்த 25 ஆண்டுகளில் எட்ட

மூலக்கதை