புறக்கணிப்பு: இரு மாவட்ட எல்லை ரோடு சீரமைக்காமல் 20 கிராம மக்கள் போக்குவரத்திற்கு சிக்கல்

தினமலர்  தினமலர்
புறக்கணிப்பு: இரு மாவட்ட எல்லை ரோடு சீரமைக்காமல் 20 கிராம மக்கள் போக்குவரத்திற்கு சிக்கல்தேவகோட்டை, - புளியால் அரசு உயர்நிலைப்பள்ளி ரோடு சீர்கேட்டால் 15 கிராம மக்கள், மாணவர்கள் அவதி படுகின்றனர்.

தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ளது புளியால். அரசு உயர்நிலைப்பள்ளி, நர்சிங் கல்லுாரி உள்ளது.இங்கு ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இந்த கிராமத்தில் ஒரு பகுதியில் மட்டும் ரோடு அமைக்கப்பட்டு நன்றாக உள்ளது. பிற பகுதியில் ரோடு போடவில்லை.சில ரோடுகளின் நடுவில் கழிவு நீர் செல்கிறது. அரசு உயர்நிலைப்பள்ளி ரோடு பள்ளங்களாக சிதைந்து நடக்கக்கூட முடியாமல் காணப்படுவதால் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

இந்த ரோட்டின் வழியாக திருவாடானை தாலுகாவைச் சேர்ந்த இளங்குன்றம், இலுப்பக்குடி, நெய்வயல், உட்பட 20 கிராமத்தினர் சென்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கிராம பகுதிகளை சேர்ந்த அனைத்து ரோடுகளும் பிரதமர் கிராமச் சாலை திட்டத்திலும், ஊராட்சி நிதியிலும் போடப்பட்டு உள்ளது. போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில் சிவகங்கை மாவட்ட பகுதியைச் சேர்ந்த முக்கால் கி.மீ.துாரத்திற்கு மட்டும் ரோடு போடவில்லை. பள்ளி மாணவர்கள் மழை பெய்தால் சிரமப்படுவதோடு , வாகனங்களால் சீருடையும் பாழாகிறது.

ஆனந்த். புளியால்: புளியால் ஒத்தக்கடையில் இருந்து அரசு உயர்நிலைப்பள்ளி வரையுள்ள ரோடு இரண்டு மாவட்டங்களை இணைக்கும் பிரதான சாலையாகும். இந்த ரோட்டை பல கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

அவசர தேவைக்கு சுற்றியுள்ள கிராம மக்கள் புளியாலுக்கு தான் வர வேண்டும். வேறு வழியில்லாமல் இந்த ரோட்டை தான் பயன்படுத்துகிறோம். மழை காலத்திற்கு முன் இந்த ரோட்டை சீரமைத்து தர வேண்டும். பேவர் பிளாக் ரோட்டின் இருபுறமும் சிமென்ட் கலக்காமல் தடுப்பு சுவர் கட்டினர். அதிகாரிகள் ரோட்டை ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.

தேவகோட்டை, - புளியால் அரசு உயர்நிலைப்பள்ளி ரோடு சீர்கேட்டால் 15 கிராம மக்கள், மாணவர்கள் அவதி படுகின்றனர்.தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ளது புளியால். அரசு உயர்நிலைப்பள்ளி, நர்சிங் கல்லுாரி

மூலக்கதை