நாடி பரிசோதனை கருவிக்கு காப்புரிமை -நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி சாதனை

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
நாடி பரிசோதனை கருவிக்கு காப்புரிமை நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி சாதனை

 

நெல்லை - சித்த மருத்துவத்துறையில் நாடிமூலம் நோய் கண்டறிய உதவும் நவீன நாடி பரிசோதனை கருவியை கண்டுபிடித்து ஒன்றிய அரசின் காப்புரிமை           சான்றிதழை இந்திய அளவில் முதலாவதாக பெற்று நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி சாதனை படைத்துள்ளது. சித்த மருத்துவத்தில் தொடு உணர்வு, கேள்வி, நோக்கு என்ற  3 விதமான வழிமுறைகளை பின்பற்றி        நோயாளிகளின் உடல் நலக்குறைபாடுகளை சித்த மருத்துவர்கள் கண்டறிகின்றனர். நோயாளிகளின் உடல் முதலியவற்றை கண்ணால் பார்த்தல்,     கைகளால் தொட்டு உணர்தல், கேள்வி கேட்டு   கலந்துரையாடல் போன்ற முறைகளை பின்பற்றியும்,   நாடி, நாக்கு, நிறம், விழி, மலம், சிறுநீர் உள்ளிட்ட 8 வகையான ஆய்வுகளை செய்து அதற்கு ஏற்ப நோயின் தன்மையை அறிந்து சித்த மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்கின்றனர். மனித உடலில் சூட்சுமமாக 3 கோடியே 50 லட்சம்   நாடிகள் உள்ளன. இதில், காந்தாரி, அத்தி, இடகலை, பிங்கலை உள்ளிட்ட 10 நாடிகள் மிகவும்      முக்கியமானவைகள் என சித்த மருத்துவர்கள்   கூறுகின்றனர். இவற்றில் இடகலை, பிங்கலை,       சுழுமுனை ஆகிய 3 நாடிகள் பிரதானமானவையாகும். இடகலையை வாதநாடி எனவும், பிங்கலையை    பித்தநாடி என்றும், சுழுமனையை கபநாடி என்றும் பிரிக்கின்றனர். உடலில் கரம், வாதம், காது, மூக்கு, கண், உச்சி உள்ளிட்ட 10 இடங்களில் நாடியை       பார்க்கலாம். ஆனாலும், கைகளில் பார்க்ககூடியதே சுலபமானதாக இருப்பதால் அதுவே வழக்கத்தில் உள்ளது. ஆன்களுக்கு வலக்கையிலும், பெண்களுக்கு இடக்கையிலும் நாடி பார்க்கப்படுகிறது. இவ்வாறு    அழுத்திப்பிடித்து நாடி பார்ப்பதற்கான நவீன         தொழில்நுட்பக் கருவியை நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் மருத்துவ குழுவினர்   கண்டறிந்துள்ளனர்.  இணை பேராசிரியர் சுபாஷ்சந்திரன், நெல்லை மண்டல அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் டி.ஜே, சுஜா பிரியதர்ஷினி, காவியா ஆகியோர் இணைந்து கணினி மூலம் நாடி பார்க்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். இம்முறையை முதலில் பரிச்சார்த்தமாகவும் பின்னர் நோயாளிகளுக்கு நேரடியாகவும் பயன்படுத்தி நாடி பார்த்தபோது, உடலில் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்தனர். இக்கருவியை முறைப்படி சித்த மருத்துவத்துறையின் அனுமதி பெறுவதற்கு முழு விவரங்களுடன் ஒன்றிய  காப்புரிமை அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தனர். அக்குழுவினர் இதை முழுமையாக ஆய்வு செய்து   சரியானதுதான் என உறுதி செய்து கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் காப்புரிமை         சான்றிதழை வழங்கியுள்ளனர். இது நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரிக்கும் கண்டறிந்த மருத்துவக்குழுவினருக்கும் கிடைத்த சாதனை வெற்றியாக கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு குறித்து நெல்லை  அரசு சித்த மருத்துவ கல்லூரி பொது மருத்துவத்துறை இணை பேராசிரியர் சுபாஷ்சந்திரன் கூறும்போது, "அறிவியல் தொழில்நுட்பத்தை பாரம்பரிய அறிவியலோடு தொடர்பு படுத்தி பாரிம்பரிய சித்த மருத்துவத்தை நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி    மீட்டுருவாக்கம் செய்து வருகிறோம். இதன் முதல் நிலையாக நாடி பரிசோதனை நிலைகளை உள்வாங்கி பாளையாங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நவீன அறிவியல் தொழில்நுட்பத்தில்     நாடிமூலம் நோய் கண்டறிய உதவும் நாடி பரிசோதனை கருவியை புதிதாக உருவாக்கினோம். தற்போது       நாங்கள் புதிதாக கண்டு பிடித்துள்ள நாடி மூலம் நோய் கண்டறிய உதவும் நவீன நாடி பரிசோதனை கருவிக்கு ஒன்றிய அரசின் காப்புரிமை சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்திய அளவில் சித்த மருத்துவத்துறையில் காப்புரிமை கிடைத்துள்ள முதல் கருவி இதுவாகும் என்பது நெல்லை அரசு சித்தமருத்துவ கல்லூரிக்கு பெருமைசேர்ப்பதாக உள்ளது. இந்த நவீன நாடிபரிசோதனை கருவி மூலம் குறுகிய காலத்தில் மிகதுல்லியமான முறையில் நாடி பரிசோதனை செய்ய முடியும்.  மேலும், இக்கருவி நோய் நிலையின் தீவிரம்          குணமாகும் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல்வேறு கூறுகளை கண்டறிய உதவியாக இருக்கும். இந்த முதல் கண்டுபிடிப்புக்கு கிடைத்திருக்கும்      ஒன்றிய அரசின் காப்புரிமை சான்றிதழானது இனி  வரும் காலங்களில் சித்த மருத்துவத்துறையில் நவீன அறிவியல் தொழில்நுட்ப முறைகள் மேலும் வளர   உத்வேகம் அளிப்பதாக இருக்கும்" என்றார்.

சித்த மருத்துவத்துறையில் நாடிமூலம் நோய் கண்டறிய உதவும் நவீன நாடி பரிசோதனை கருவியை கண்டுபிடித்து ஒன்றிய அரசின் காப்புரிமை சான்றிதழை இந்திய அளவில் முதலாவதாக பெற்று நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி சாதனை படைத்துள்ளது.

சித்த மருத்துவத்தில் தொடு உணர்வு, கேள்வி, நோக்கு என்ற  3 விதமான வழிமுறைகளை பின்பற்றி        நோயாளிகளின் உடல் நலக்குறைபாடுகளை சித்த மருத்துவர்கள் கண்டறிகின்றனர். நோயாளிகளின் உடல் முதலியவற்றை கண்ணால் பார்த்தல்,     கைகளால் தொட்டு உணர்தல், கேள்வி கேட்டு   கலந்துரையாடல் போன்ற முறைகளை பின்பற்றியும்,   நாடி, நாக்கு, நிறம், விழி, மலம், சிறுநீர் உள்ளிட்ட 8 வகையான ஆய்வுகளை செய்து அதற்கு ஏற்ப நோயின் தன்மையை அறிந்து சித்த மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்கின்றனர்.

மனித உடலில் சூட்சுமமாக 3 கோடியே 50 லட்சம்   நாடிகள் உள்ளன. இதில், காந்தாரி, அத்தி, இடகலை, பிங்கலை உள்ளிட்ட 10 நாடிகள் மிகவும் முக்கியமானவைகள் என சித்த மருத்துவர்கள்   கூறுகின்றனர். இவற்றில் இடகலை, பிங்கலை,       சுழுமுனை ஆகிய 3 நாடிகள் பிரதானமானவையாகும். இடகலையை வாதநாடி எனவும், பிங்கலையை    பித்தநாடி என்றும், சுழுமனையை கபநாடி என்றும் பிரிக்கின்றனர். உடலில் கரம், வாதம், காது, மூக்கு, கண், உச்சி உள்ளிட்ட 10 இடங்களில் நாடியை  பார்க்கலாம். ஆனாலும், கைகளில் பார்க்ககூடியதே சுலபமானதாக இருப்பதால் அதுவே வழக்கத்தில் உள்ளது.

கணினி மூலம் நாடி பார்க்கும் கருவி

ஆன்களுக்கு வலக்கையிலும், பெண்களுக்கு இடக்கையிலும் நாடி பார்க்கப்படுகிறது. இவ்வாறு    அழுத்திப்பிடித்து நாடி பார்ப்பதற்கான நவீன         தொழில்நுட்பக் கருவியை நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் மருத்துவ குழுவினர்   கண்டறிந்துள்ளனர். இணை பேராசிரியர் சுபாஷ்சந்திரன், நெல்லை மண்டல அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் டி.ஜே, சுஜா பிரியதர்ஷினி, காவியா ஆகியோர் இணைந்து கணினி மூலம் நாடி பார்க்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இம்முறையை முதலில் பரிச்சார்த்தமாகவும் பின்னர் நோயாளிகளுக்கு நேரடியாகவும் பயன்படுத்தி நாடி பார்த்தபோது, உடலில் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்தனர். இக்கருவியை முறைப்படி சித்த மருத்துவத்துறையின் அனுமதி பெறுவதற்கு முழு விவரங்களுடன் ஒன்றிய  காப்புரிமை அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தனர். அக்குழுவினர் இதை முழுமையாக ஆய்வு செய்து   சரியானதுதான் என உறுதி செய்து கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் காப்புரிமை  சான்றிதழை வழங்கியுள்ளனர். இது நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரிக்கும் கண்டறிந்த மருத்துவக்குழுவினருக்கும் கிடைத்த சாதனை வெற்றியாக கருதப்படுகிறது.

மேலும் வளர  உத்வேகம்

இந்த கண்டுபிடிப்பு குறித்து நெல்லை  அரசு சித்த மருத்துவ கல்லூரி பொது மருத்துவத்துறை இணை பேராசிரியர் சுபாஷ்சந்திரன் கூறும்போது, "அறிவியல் தொழில்நுட்பத்தை பாரம்பரிய அறிவியலோடு தொடர்பு படுத்தி பாரிம்பரிய சித்த மருத்துவத்தை நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி    மீட்டுருவாக்கம் செய்து வருகிறோம். இதன் முதல் நிலையாக நாடி பரிசோதனை நிலைகளை உள்வாங்கி பாளையாங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நவீன அறிவியல் தொழில்நுட்பத்தில்     நாடிமூலம் நோய் கண்டறிய உதவும் நாடி பரிசோதனை கருவியை புதிதாக உருவாக்கினோம். தற்போது       நாங்கள் புதிதாக கண்டு பிடித்துள்ள நாடி மூலம் நோய் கண்டறிய உதவும் நவீன நாடி பரிசோதனை கருவிக்கு ஒன்றிய அரசின் காப்புரிமை சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்திய அளவில் சித்த மருத்துவத்துறையில் காப்புரிமை கிடைத்துள்ள முதல் கருவி இதுவாகும் என்பது நெல்லை அரசு சித்தமருத்துவ கல்லூரிக்கு பெருமைசேர்ப்பதாக உள்ளது. இந்த நவீன நாடிபரிசோதனை கருவி மூலம் குறுகிய காலத்தில் மிகதுல்லியமான முறையில் நாடி பரிசோதனை செய்ய முடியும். மேலும், இக்கருவி நோய் நிலையின் தீவிரம்   குணமாகும் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல்வேறு கூறுகளை கண்டறிய உதவியாக இருக்கும். இந்த முதல் கண்டுபிடிப்புக்கு கிடைத்திருக்கும்   ஒன்றிய அரசின் காப்புரிமை சான்றிதழானது இனி  வரும் காலங்களில் சித்த மருத்துவத்துறையில் நவீன அறிவியல் தொழில்நுட்ப முறைகள் மேலும் வளர   உத்வேகம் அளிப்பதாக இருக்கும்" என்றார்.

 

மூலக்கதை