ஹீரோக்கு இணையான சம்பளம் வேண்டும் - ஸ்ருதிஹாசன்

தினமலர்  தினமலர்
ஹீரோக்கு இணையான சம்பளம் வேண்டும்  ஸ்ருதிஹாசன்

சமீபகாலமாக இந்திய சினிமாவில் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வேண்டும் என்று கதாநாயகிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஹீரோவுக்கு இணையாக தனக்கு சம்பளம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் ஆனால், அதற்கு தனக்கு 20 வருடம் ஆனதாக கூறினார்.

சமீபத்தில் இதுகுறித்து நடிகை ஸ்ருதி ஹாசனிடம் கேட்டபோது, "பிரியங்கா சோப்ரா ஹீரோவுக்கு இணையான சம்பளம் பெற்று அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார் அதுவும் ஹாலிவுட் ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை அவர் வாங்கியதாக கூறியது பெருமையாக உள்ளது. சினிமா துறையில் கதாநாயகிகளுக்கு சமமான சம்பளம் குறித்து எந்த பேச்சும் எழுவது இல்லை. கதாநாயகர்களுக்கு சமமான சம்பளம் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் நாள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்'' என்று இவ்வாறு அவர் சு கேன்ஸ் பட விழாவில் பங்கேற்று போது கூறினார்.

மூலக்கதை