எங்கே இருக்கிறது இரு மொழி கொள்கை?: பொன்முடிக்கு அண்ணாமலை கேள்வி

தினமலர்  தினமலர்
எங்கே இருக்கிறது இரு மொழி கொள்கை?: பொன்முடிக்கு அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை-'தி.மு.க., முதல் குடும்பத்தினரும், மற்ற தி.மு.க.,வினரும் நடத்தும் பள்ளிகளில், இரு மொழி கொள்கையா கடைப்பிடிக்கப்படுகிறது?' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:



இன்ஜினியரிங் கல்லுாரிகளில் தமிழ் வழி பாடப் பிரிவு ரத்து செய்வதாக, அண்ணா பல்கலை அறிவித்தது. பா.ஜ., வெளியிட்ட அறிக்கைக்கு பின், 'ரத்து செய்யப்பட மாட்டாது' என, அமைச்சர் பொன்முடி அறிவிக்கிறார்.

பல்கலை ஆட்சிமன்ற குழு உறுப்பினராக, தி.மு.க., - எம்.எல்.ஏ., பரந்தாமன் இருக்கிறார்.

அப்படி இருக்கையில், எடுக்கப்படும் முடிவு குறித்து, அரசுக்கு தெரியவில்லை என்றால், ஆட்சிமன்றக் குழுவில் இருப்பதில் என்ன பயன்?

அரசுக்கு தெரிந்தே பாடப் பிரிவுகள் ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டது என்பதை மறைக்க, மழுப்ப பார்க்கிறார் பொன்முடி. 'மும்மொழி கொள்கையை ஆதரிக்கிறாரா அண்ணாமலை?' என்று கேட்டிருக்கிறார் பொன்முடி.

என் மகன் படிக்கும் பள்ளியில், மூன்று மொழிகள் பயிற்று விக்கப்படுகின்றன. அவர், 20 வயதில் ஐந்து மொழிகள் கற்றிருக்க வேண்டும் என்பதே, என் ஆசை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இதேபோல பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே, என் விருப்பம்.

சென்னை-'தி.மு.க., முதல் குடும்பத்தினரும், மற்ற தி.மு.க.,வினரும் நடத்தும் பள்ளிகளில், இரு மொழி கொள்கையா கடைப்பிடிக்கப்படுகிறது?' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி

மூலக்கதை