75 ரூபாய் நாணயம் நாளை வௌியீடு

தினமலர்  தினமலர்
75 ரூபாய் நாணயம் நாளை வௌியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்புதுடில்லி,-புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழா அன்று, அதை நினைவுகூரும் விதமாக, 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை வெளியிடுகிறார்.

புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள வேளையில், புதிய பார்லிமென்ட் கட்டடம் திறக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை கொண்டாடும் விதமாக, 75 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய நாணயத்தை பிரதமர் மோடி நாளை வெளியிடுகிறார். நாணயத்தின் ஒருபுறம் அசோக ஸ்துாபியில் சிங்க முகத்துடன் கூடிய சிற்பம், அதன் கீழே, 'சத்யமேவ ஜெயதே' என்றும், இடதுபுறம், 'பாரத்' என, தேவநகரி எழுத்துருவிலும், வலதுபுறம், 'இந்தியா' என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு இருக்கும். நாணயத்தின் மதிப்பான 75 ரூபாய் என்பது எண்ணில் பொறிக்கப்பட்டு இருக்கும்.

நாணயத்தின் மறுபுறம், புதிய பார்லிமென்ட் வளாகமும் அதன் மேலே, 'சன்சத் சன்குல்' என, தேவநகரி எழுத்துருவிலும், கீழே, 'பார்லிமென்ட் காம்ப்ளக்ஸ்' என, ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு இருக்கும்.

புதுடில்லி,-புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழா அன்று, அதை நினைவுகூரும் விதமாக, 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை வெளியிடுகிறார்.புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர்

மூலக்கதை