மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு; கலெக்டர் பேட்டி

தினமலர்  தினமலர்
மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு; கலெக்டர் பேட்டிகடலுார்,-கல்வி, மருத்துவம் போன்றவற்றிக்கு முக்கியத்துவம் அளித்து உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என, கடலுாரில் புதிபேற்ற கலெக்டர் அருண் தம்புராஜா கூறினார்.

கடலுார் கலெக்டராக பணிபுரிந்த பாலசுப்ரமணியம் தமிழக தேர்தல் ஆணைய செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் நாகப்பட்டினம் கலெக்டராக பணிபுரிந்த அருண் தம்புராஜ் கடலுார் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

அவர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின், அவர், கூறியதாவது:

கடலுாரில் பதவி ஏற்று உள்ளதால், மாவட்டத்தில் உள்ள நிறைகள், குறைகள் மற்றும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து பார்க்க உள்ளேன்.

மேலும் கல்வி, மருத்துவம் போன்றவற்றிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் தீர்வு காணப்படும்.

பொது மக்கள் அளிக்கும் நேர்மையான கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

மீன்வளம் மற்றும் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் அவர்களுடன் கலந்துரையாடல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடலுார்,-கல்வி, மருத்துவம் போன்றவற்றிக்கு முக்கியத்துவம் அளித்து உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என, கடலுாரில் புதிபேற்ற கலெக்டர் அருண் தம்புராஜா கூறினார்.கடலுார் கலெக்டராக

மூலக்கதை