தமிழகத்தில் 'அமுல்' பால் கொள்முதல்: அமித் ஷாவிற்கு ஸ்டாலின் அவசர கடிதம்

தினமலர்  தினமலர்
தமிழகத்தில் அமுல் பால் கொள்முதல்: அமித் ஷாவிற்கு ஸ்டாலின் அவசர கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை-'அமுல் நிறுவனம், தமிழகத்தில் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

'அமுல் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க, பால் கொள்முதல் விலையை, ஆவின் உயர்த்த வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:குஜராத் அரசின் பொதுத் துறை பால் நிறுவனமான அமுல், காஞ்சிபுரம், திருவள்ளுர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தினமும் 30 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து, அதற்காக சுய உதவிக் குழுக்களை உருவாக்கி வருகிறது. ஆவினை விட அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்கிறது.சென்னைக்கு மிக அருகில் உள்ள, ஆந்திராவின் ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில், பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கும் பணிகளை, அமுல் மேற்கொண்டு வருகிறது. வேலுார், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் பால் கொள்முதல் செய்ய, அமுல் திட்டமிட்டுள்ளது. இதனால், ஆவின் நிறுவனம் பெரும் பங்கை இழக்க நேரிடும். அமுல் நிறுவனத்திடம், ஆவின் ஒருபோதும் வீழ்ந்து விடக் கூடாது.எனவே, பால் கொள்முதல் விலையை பசும் பால் லிட்டருக்கு 42 ரூபாய், எருமை பாலுக்கு 51 ரூபாய் என, ஆவின் உயர்த்த வேண்டும். அப்போது தான் ஆவின் நிறுவனத்தை காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னை-'அமுல் நிறுவனம், தமிழகத்தில் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.nsimg3330884nsimg

மூலக்கதை