சி.பி.ஐ., இயக்குனராக பிரவீன் சூட் பொறுப்பேற்பு

தினமலர்  தினமலர்
சி.பி.ஐ., இயக்குனராக பிரவீன் சூட் பொறுப்பேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி,-மத்திய புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ.,யின் புதிய இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி பிரவீன் சூட், 59, நேற்று முறைப்படி பொறுப்பேற்றார்.

சி.பி.ஐ., இயக்குனராக இருந்த சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய இயக்குனராக பிரவீன் சூட் நேற்று பொறுப்பேற்றார்.

கடந்த 1986ம் ஆண்டின் கர்நாடக மாநில கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான பிரவீன் சூட், அம்மாநில டி.ஜி.பி.,யாக பணியாற்றி வந்தார்.

பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு சமீபத்தில், பிரவீன் சூட்டை புதிய சி.பி.ஐ., இயக்குனராக தேர்வு செய்திருந்தது. அவர் இப்பதவியில் இரண்டு ஆண்டுகளுக்கு இருப்பார்.

புதுடில்லி,-மத்திய புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ.,யின் புதிய இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி பிரவீன் சூட், 59, நேற்று முறைப்படி பொறுப்பேற்றார்.சி.பி.ஐ., இயக்குனராக இருந்த சுபோத் குமார்

மூலக்கதை