ரூ.140 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தான் வாள்

தினமலர்  தினமலர்
ரூ.140 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தான் வாள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன்: மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள் ரூ. 140 கோடிக்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான், இவர் மைசூர் புலி என ஆங்கிலேயரால் அழைக்கப்பட்டார். ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடைபெற்ற போரில், திப்பு கொல்லப்பட்டார். இவர் பயன்படுத்திய பொருட்களைச் சூறையாடிய ஆங்கிலேய பிரபுக்கள், அதை லண்டனுக்கு கொண்டு சென்றனர்.தற்போது, லண்டனில் அது ஏலத்தில் விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போன்ஹாம்ஸ் என்ற ஏல நிறுவனம் திப்புசுல்தான் பயன்படுத்திய வாள்களில் ஒன்று இன்று ஏலம் விட்டது. அந்த வாள் 14 மில்லியன் பவுண்டுக்கு (இந்திய ரூபாயில் ரூ. 140 கோடிக்கு ) விலை போனது.

லண்டன்: மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள் ரூ. 140 கோடிக்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான், இவர் மைசூர் புலி என

மூலக்கதை