கவின் பட இயக்குனர் உடன் இணையும் துருவ் விக்ரம்

தினமலர்  தினமலர்
கவின் பட இயக்குனர் உடன் இணையும் துருவ் விக்ரம்

நடிகர் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விரைவில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் .இந்த படத்தில் அவர் கபடி வீரராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் துருவ். அதன்படி, டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். மாரி செல்வராஜ் படத்தை முடித்தவுடன் துருவ் விக்ரம் இந்த படத்தில் நடிப்பார் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.


மூலக்கதை